உலகச் சுகாதார அமைப்பின் கவலைக்கு தீர்வாக அமையும்:சீனா
2021-01-23 17:30:37

49 வளர்ந்த நாடுகளில் 3.9 கோடிக்கு அதிகமானோருக்குக் கரோனா வைரஸுக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனிடையில் வளர்ச்சி குன்றிய சில நாடுகளில் 25 பேருக்கான தடுப்பூசி மருந்து மட்டும் உள்ளது என்று உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்கநர் தெட்ரோஸ் அண்மையில் கவலை தெரிவித்தார். சில மேலை நாடுகள் பெருமளவில் தடுப்பூசி மருந்துகளை வாங்கிப் பதுக்கும் செயல், உலகச் சந்தையில் குழப்பத்தையும், உலகச் சுகாதார அமைப்பின் தடுப்பூசி கொள்முதல் போக்கிற்குத் தடையையும் விளைவித்துள்ளது.

இக்கட்டான காலத்தில் சீனா பெரிய நாட்டின் பொறுப்பை ஏற்று செயல்பட்டு வருகிறது. தற்போதுவரை சீனா வழங்கிய தடுப்பூசி 1.5 கோடி பேருக்குப் போடப்பட்டுள்ளது. அதன் பாதுகாப்பு மற்றும் பயன் தன்மை சோதிக்கப்பட்டுள்ளது.  சிலி, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, துருக்கி, இந்தோனேசியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் சீனத் தடுப்பூசி, அனுமதி பெற்று பயன்பாட்டுக்குச் சென்றுள்ளது.