அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளிடையில் முரண்பாடு தணிய வாய்ப்பு உண்டா?
2021-01-25 19:15:32

நார்ட் ஸ்ட்ரீம்-2 திட்டப்பணியின் எரிவாயு குழாய் பாதை கட்டுமானத்தை அமெரிக்க அரசு தடுக்கும் என்று புதிதாகப் பதவி ஏற்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டோனி ப்ளின்கென் அண்மையில் தெரிவித்தார். இது குறித்து, ஐரோப்பிய நாடுகள் மனநிறைவின்மை தெரிவித்துள்ளன. ஜெர்மனி தலைமை அமைச்சர் மேர்கெல் கூறுகையில் நார் ஸ்ட்ரீம்-2 திட்டப்பணியைக் கைவிட மாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்தார்.

இச்சம்பவம் தவிர, அமெரிக்காவின் ஃபைசெர் தொழில் நிறுவனம் தடுப்பூசிகளை வழங்குவதில் தாமதம் செய்வதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பு நாடுகளுக்கு எரிச்சல் ஊட்டியுள்ளது. இதன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இத்தாலி தலைமையமைச்சர் ஜியூசெப்பி கொண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் கமிட்டி அண்மையில் வெளியிட்ட கருத்து கணிப்பு ஒன்றின்படி, அமெரிக்கா நம்பகமான நாடு அல்ல என்று பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் தெரிவித்தனர். ஐரோப்பிய ஒன்றியம் உலகளவில் மேலும் சுதந்திரமாகப் பங்கு ஆற்ற வேண்டும் என்று மக்கள் பலர் விருப்பம் தெரிவித்தனர்.