பலதரப்புவாதத்தைத் தொடர்ச்சியாக ஆதரிக்கும் சீனா
2021-01-26 16:17:43

பலதரப்புவாதத்தைத் தொடர்ச்சியாக ஆதரிக்கும் சீனா_fororder_rBABCmAPqnSATOwKAAAAAAAAAAA413.900x620

உலகம் கொந்தளிப்பான சீர்திருத்தக் காலத்தில் தற்போது நுழைந்துள்ளது. ஒருதரப்புவாதம், பாதுகாப்புவாதம் ஆகியவை உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் சர்வதேச ஒத்துழைப்பைச் சீனா தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி வருகின்றது. அத்துடன், ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறும் திறப்பு நெடுநோக்கை மேற்கொண்டு, தொடரவல்ல வளர்ச்சியை மேம்படுத்தி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் புத்தாக்கத்தை முன்னேற்றி, புதிய ரக சர்வதேச உறவின் உருவாக்கத்தையும் முன்னேற்றி வருகின்றது. இதன் மூலம், பலதரப்புவாதத்தைத் தொடர்ச்சியாக ஆதரிக்கும் சீனாவின் உறுதியையும் முயற்சிகளையும் சர்வதேச சமூகம் முழுமையாக உணர முடியும். உலக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் சீனா முக்கியப் பங்கினை ஆற்றி வருகின்றது. எதிர்காலத்தில் சீனா மேலும் அதிகமாகப் பங்காற்ற உள்ளது என்று தென் ஆப்பிரிக்காவின் விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார மற்றும் வணிகக் கழகத்தின் தலைவர் ஜானி ரோசோவ் நம்பிக்கை தெரிவித்தார்.