உலகிற்கு உலக மயமாக்கம் தேவை
2021-01-27 20:11:48

கடந்த ஓராண்டில், கோவிட்-19 நோயின் பரவலைக் காரணமாகக் கொண்டு சிலர் பொருளாதார உலக மயமாக்கத்தை எதிர்த்து வருகின்றனர். ஆனால், கரோனா தடுப்பூசியின் ஆய்வுக்கு பன்னாட்டு அறிவியலாளர்களின் ஒத்துழைப்பு தேவை, தடுப்பூசியின் விநியோகத்துக்கு உலகின் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் சரக்குப் போக்குவரத்து வலைப்பின்னல் தேவை, உலகப் பொருளாதாரத்தின் மீட்சிக்கு பன்னாட்டு தொழில் மற்றும் விநியோகச் சங்கிலியின் மீட்பு தேவை. நடைமுறையைப் பார்த்தால், உலக மயமாக்கம் தடுக்க முடியாத ஒன்று என்று உலகளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உலக மயமாக்கத்தை உறுதியாக ஆதரிக்கும் நாடான சீனா, கரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில், 150க்கும் அதிகமான நாடுகள் மற்றும் 13 சர்வதேச அமைப்புகளுக்கு நோய் தடுப்பு தொடர்பான உதவி அளித்துள்ளது.

திறப்பு, பொறுமை ஆகியவை படைத்த உலக மயமாக்கத்தை உருவாக்குவதற்கு, சில நாடுகளின் முயற்சி மட்டும் நிச்சயமாகப் போதாது. இதற்கு உலகளவில் பொது கருத்து ஏற்பட வேண்டும். வர்த்தகம், முதலீடு, தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் தடைகளை உருவாக்கக் கூடாது. குறிப்பாக வளரும் நாடுகளுக்குத் தேவையான ஆதரவு அளிக்க வேண்டும். அவற்றின் நேர்மையான வளர்ச்சி உரிமையைப் பேணிக்காக்க வேண்டும்.