உலக மேலாண்மை பற்றிய சீனாவின் கருத்து
2021-01-28 18:48:14

உலக மேலாண்மை பற்றிய சீனாவின் கருத்து_fororder_微信图片_20210128184557

ஆக்ஸ்போர்டு பொருளாதார ஆய்வகத்தின் மதிப்பீடின்படி 2025ஆம் ஆண்டு வரை, புதிதாக வளரும் நாடுகளின் நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சியில் கரோனா வைரஸ் பரவல் ஏற்படுத்தும் பாதிப்பு, வளர்ந்த நாடுகளில் இருப்பதை விட 1 மடங்கு அதிகமாக இருக்கும். வளரும் நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் இடையேயான வளர்ச்சி இடைவெளி இவ்வாறாக தொடர்ந்து பெரிதாக இருந்தால், உலகப் பொது நலன் சீர்க்குலையும்.

வளர்ச்சியில் நேர்மை மற்றும் நியாயத்துக்குச் சீனா எப்போதுமே முக்கியம் அளித்து வருகிறது. உலக வர்த்தக அமைப்பு மற்றும் சர்வதேச நாணய அமைப்புமுறையின் சீர்திருத்தத்தை முன்னேற்ற வேண்டும் என்றும், ஐ.நாவின் தொடரவல்ல வளர்ச்சிக்கான 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்த வேண்டும் என்றும் சீனா வேண்டுகோள் விடுத்தது. மேலும், தெற்கு தெற்கு ஒத்துழைப்பை இடைவிடாமல் ஆழமாக்கி, பொது வளர்ச்சியை நாட பாடுபடும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

உலக மேலாண்மைக்கான மேம்பாடு, குறுகிய காலத்துக்குள் நிறைவேற்றப்பட முடியது. பல்வேறு தரப்புகள் பலதரப்புவாதத்தில் ஊன்றி நின்று, விரிவான முறையில் கலந்தாய்வு செய்தால், உலக மேலாண்மை அமைப்புமுறை மேலும் நேர்மையான மற்றும் நியாயமான பாதை நோக்கி முன்னேறலாம்.