© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
கடந்த 4 ஆண்டுகளாக மிகக் கடினமான காலகட்டத்தில் இருந்து வரும் சீன-அமெரிக்க உறவு, உலக அமைதி மற்றும் நிதானத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க - சீன உறவுக்கான தேசிய கமிட்டியுடன் பிப்ரவரி 2 ஆம் நாள் காணொலி வழிப் பேச்சுவார்த்தை நடத்திய போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் மத்திய வெளிவிவகாரப் பணிக் குழுவின் அலுவலகத்தின் இயக்குநருமான யாங்சியேச்சு பேசுகையில், சீன-அமெரிக்க உறவை இயல்புப் பாதை நோக்கி முன்னேற்றுவதற்கான பல முன்மொழிவுகளைச் முன்வைத்தார். அமெரிக்கா, தோற்றவர்களின் இழப்பையும் வென்றவர்களின் பெறுமதியையும் ஒன்று போலக் கருதும் பழையகாலச் சிந்தனையை மாற்றி, சீனாவுடன் இணைந்து இரு நாட்டு உறவு சரியான திசை நோக்கிச்செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
இதனிடையில், சீனாவின் மீதான குறுகிய பார்வை கொண்டு சுய தோல்வி அடைந்த டிரம்ப் அரசின் கொள்கைகளைப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பைடன் அரசு கைவிட வேண்டும் என்று யு.எஸ். ஏ டுடே என்னும் செய்தித்தாள் அண்மையில் வெளியிட்ட கட்டுரையில் கருத்து தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமையில், உலகளவில் கரோனா வைரஸ் தடுப்புப் பணி, பொருளாதார மீட்சி, காலநிலை மாற்றம் முதலியவற்றில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பரந்த ஒத்துழைப்பு வாய்ப்புகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.