சீனப்பொருளாதாரத்தின் உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்தியுள்ள வசந்த விழா விடுமுறை கால நுகர்வு
2021-02-18 20:18:12

சீன வணிக அமைச்சகம் 17ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, வசந்த விழா காலத்தில் சீனாவின் முக்கிய சில்லறை மற்றும் உணவகத் தொழில் நிறுவனங்களின் விற்பனைத் தொகை, 82 ஆயிரத்து 100 கோடி யுவானை எட்டியது. இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 28.7 விழுக்காடு அதிகரித்தது. இவ்வாண்டு நுகர்வு சீனப் பொருளாதாரத்துக்கு உயிராற்றலை ஊட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு வசந்த விழா விடுமுறை நுகர்வுக்கு சில புதிய தனிச்சிறப்புகள் காணப்பட்டுள்ளன. முதலில் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக இருந்த அதே வேளையில், இணைய நுகர்வு அதிகமாக இருந்தது. தவிர, குறிப்பிட்ட நுகர்வு, அனுபவ நுகர்வு, நுண்ணறிவு நுகர்வு முதலிய புதிதாக வளர்ந்து வரும் நுகர்வு மாதிரிகள், இவ்வாண்டு வசந்த விழா விடுமுறையில் தனிச்சிறப்பாக மாறியுள்ளன.

அளவில் பெரிய சீன உள்நாட்டு சந்தை, வெளிக்கொணர்ந்து வரும் நுகர்வு உள்ளார்ந்த ஆற்றல் ஆகியவை, சீனா புதிய வளர்ச்சிக் கட்டத்தில் நுழைந்து, புதிய வளர்ச்சி கட்டமைப்பை உருவாக்குவதற்கு முக்கிய ஆதாரத் தூண்ணாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.