© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் 101லட்சத்து 59ஆயிரத்து 860 கோடி யுவான் ஆகப் பதிவாகி, சீனப் பொருளாதாரம் 2.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அசாதாரணமான சூழலில் 2020ஆம் ஆண்டு சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி) முதல்முறையாக 100லட்சம் கோடியைத் தாண்டியது. இத்தகைய சாதனையை அடைவது எவ்வளவு கஷ்டம் என்பதை சீன மக்கள் தெரிந்து கொண்டுள்ளனர்.
சீனப் பொருளாதாரம் இந்த சாதனை பெற்றது எப்படி? சீன அரசு மக்களின் வாழ்க்கை மற்றும் நலன்களில் மிகுந்த கவனம் செலுத்தி அதை முதன்மையாகக் கருதியது தான் இதற்கு அடிப்படை காரணம். இதற்கு விடையாகும். கரோனா நோய் தொற்றுக் கட்டுப்பாட்டையும் பொருளாதார வளர்ச்சி மீட்சியையும் எப்படி ஒருங்கிணைப்பது என்ற உலகளாவிய சிக்கலை எதிர்கொண்ட சீனா, தனக்குரிய தீர்வு வழங்கியுள்ளது. அதாவது, வேலை வாய்ப்பு மற்றும் மக்கள் வாழ்க்கை தொ டர்பான பணிகளை மிக முக்கிய இடத்தில் வைத்து சீனா செயல்பட்டு வருகிறது. இதற்காக, பெருமளவில் வரி மற்றும் கட்டணங்களைக் குறைத்து நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களுக்கான நீதி ஆதரவை அதிகரிக்க சீனா முயற்சி எடுத்துள்ளது. அதற்கு காரணத்தை எளிமையாக விளக்கிக் கூறலாம். தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை உறுதி செய்தால் தான், மக்களின் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும். அப்போது தான், மக்களுக்கு வருமானம் கிடைக்கும். 2020ஆம் ஆண்டில் மக்களின் வேலையில்லாதவர்களின் விகிதம், முன்மதிப்பீட்டை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.