அமெரிக்கா இனவெறிக்குத் தீர்வு காண வேண்டும் என ஐ.நா மனித உரிமைக் குழு நிபுணர்கள் வேண்டுகோள்
2021-03-03 10:31:33

அமெரிக்கா இனவெறிக்குத் தீர்வு காண வேண்டும் என ஐ.நா மனித உரிமைக் குழு நிபுணர்கள் வேண்டுகோள்_fororder_微信图片_20210303090121

அமெரிக்கா இனவெறிக்குத் தீர்வு காண வேண்டும் என ஐ.நா மனித உரிமைக் குழு நிபுணர்கள் வேண்டுகோள்_fororder_微信图片_20210303090139

ஐ.நா மனித உரிமை செயற்குழுவின் 46ஆவது கூட்டத் தொடரில், மனித உரிமை பிரச்சினைக்கான ஐ.நாவின் சிறப்பு நிபுணர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்றில், அமெரிக்க அரசு இனவெறி மற்றும் இனப்பாகுபாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய் பரவிய 2020ஆம் ஆண்டு காலத்தில் அமெரிக்காவில் ஆப்பிரிக்க வம்சாவழியைச் சேர்ந்தவர்களுக்குக் கரோனா தொற்று விகிதம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விகிதம் மற்றும் உயிரிழப்பு விகிதம், வெள்ளையர்களை விட, முறையே 3, 5 மற்றும் 2 மடங்குகள் அதிகமாக உள்ளன. அதுபோன்றே காவற்துறையினரால் கொல்லப்பட்ட ஆப்பிரிக்க வம்சாவழியைச் சேர்ந்தவர்களின் விகிதமும் வெள்ளையர்களை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது.  அது மட்டுமல்லாமல் அமெரிக்காவில் மற்ற வம்சாவழியைச் சேர்ந்த மக்களும் இனப் பாகுபாட்டின் அடிப்படையில் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, அமெரிக்க அரசியல்வாதிகள் தங்கள் நாட்டில் நிலவும் தேசிய இனவெறி பிரச்சினையைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டு, மனித உரிமை என்ற பெயரில் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் வெளிப்படையாகத் தலையிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.