உலகிற்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வரும் சீனாவின் கூட்டத் தொடர்கள்
2021-03-04 18:33:48

ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத் தொடர்களில் இருந்து சீனக் கொள்கைகள் வெளியிடப்படும். இந்த ஆண்டுக் கூட்டத் தொடர்கள், வெளியுலகம் சீனாவைப் பார்த்து அறிந்து கொள்ளும் முக்கிய ஐன்னலாகும் என பொதுவாகக் கருதப்படுகிறது. லத்தின் அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு கட்டுரையில் குறிப்பிடுகையில், இவ்வாண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டு நிறைவாகவும், சீனாவின் 14ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் துவக்கமாகவும் விளங்குகிறது. இதனால் நடப்புக் கூட்டத் தொடர்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. உலகமயமாக்கல் காலத்தில், இவை சீனாவுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கும் மிகவும் முக்கிய தேவையாகும்.

எதிர்பார்ப்புகளை விட அதிகமான வளர்ச்சி என்பது, 2020ஆம் ஆண்டு சீனப் பொருளாதாரம் பற்றிய வெளிநாட்டு செய்தி ஊடகங்களின் கணிப்பாகும். இன்று இன்னும் சிக்கலான கடினமான பொருளாதார நிலைமையில், சீனா தொடர்ந்து மேலதிக உந்து சக்தியாக உருவெடுக்கும் என உலகம் எதிர்பார்க்கிறது.  குறிப்பாக, வெளிநாட்டுத் திறப்பு, புத்தாக்கம் மற்றும் பசுமை வளர்ச்சி பற்றி கூட்டத் தொடர்களில் இருந்து வெளியாகும் அறிகுறிகள் உலகிற்கு மேலதிக வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

2021ஆம் ஆண்டு, பன்முகமான நவீனமயமாக்க நாட்டைக் கட்டியமைக்கும் இலக்கை நோக்கி பயணிக்க துவங்குகிறது. இவ்வாண்டு, அடுத்த 5 ஆண்டுகள் மற்றும் அடுத்த 15ஆண்டுகளின் வளர்ச்சித் திட்டங்கள் நடப்புக் கூட்டத்தொடர்களில் உருவாக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன. இவை, உலகத்திற்கு என்னென்ன புதிய வாய்ப்புகளை கொண்டு வருமென பொருந்திருந்து பார்க்கலாம்.