ஹாங்காங் தேர்தல் அமைப்புமுறையை முழுமைப்படுத்துவது குறித்து கருத்து
2021-03-05 18:59:20

சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத்தொரின் நிகழ்ச்சி நிரல் மார்ச் 4-ஆம் நாள் இரவு வெளியிடப்பட்டது. இதில், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தேர்தல் அமைப்புமுறையை முழுமைப்படுத்துவது தொடர்பான தேசிய மக்கள் பேரவையின் வரைவுத் தீர்மானத்தைப் பரிசீலனை செய்வது இதில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.

கடந்த சில ஆண்டுகளில், மேலை நாடுகளின் சீன எதிர்ப்பு சக்தியின் ஆதரவுடன், சீனாவை எதிர்த்து ஹாங்காங்கைச் சீர்குலைக்கும் சக்திகள், தீய நோக்கத்துடன் ஹாங்காங் தேர்தல் விவகாரத்தில் தலையிட்டு வருகின்றன. இச்சூழ்நிலையில், சீனாவின் அதியுயர் தேசிய அதிகார அமைப்பு, ஹாங்காங் தேர்தல் அமைப்புமுறையை முழுமைப்படுத்துவதை, ஆண்டு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பது தேவையாகவும் அவசியமாகவும் உள்ளது.

உலகளவில், எழுத்து மூல அரசியல் அமைப்புச் சட்டம் கொண்ட 190க்கும் அதிகமான நாடுகளில், நாட்டின் இறையாண்மையையும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாக்காகவும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு மதிப்பு அளித்து அதை பின்பற்றுவதாகவும் உறுதிமொழி எடுக்குமாறு, தங்கள் அரசுப் பணியாளர்களை பெரும்பாலான நாடுகள் கோருகின்றன. சீனாவின் சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களில் ஒன்றான ஹாங்காங்கை ஆளும் அதிகாரம் தேசபக்தர்களுக்கு உள்ளது என்பது இயல்பானது.

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தேர்தல் அமைப்புமுறையை முழுமைப்படுத்துவது, மக்களின் விருப்பத்துக்குரியதாக உள்ளது. அதோடு, ஹாங்காங்கின் அடிப்படை நலனுக்குப் பொருந்தியது. அமைப்புமுறை ரீதியிலான காப்புறுதியை முழுமைப்படுத்தினால் தான், சர்வதேச நாணயம், வர்த்தகம் மற்றும் கப்பல்போக்குவரத்து மையத்தின் தகுநிலையை ஹாங்காங் நிலைநிறுத்த முடியும். மக்கள் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல்வேறு முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு, ஹாங்காங் மக்கள் இனிமையான மற்றும் அமைதியான எதிர்காலத்தை அனுபவிக்க முடியும்.