உலகப் பொருளாதாரத்திற்கு உறுதித்தன்மை அளிக்கும் சீனாவின் வளர்ச்சி இலக்கு!
2021-03-05 20:13:28

சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத்தொடர்கள் 5ஆம் நாள் துவங்கின. வழக்கம் போல, வெளிநாட்டு செய்தி ஊடகங்கள், சீனாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளன. இப்போது இப்பதில் வெளிவந்தது. 2021ஆம் ஆண்டு உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு இலக்கு 6விழுக்காட்டுக்கு மேல் இருக்குமென சீனா மதிப்பிட்டுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிலைமையை நன்றாக கருத்தில் கொண்டு பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற இலக்கு இதுவாகும்.

ஏற்றுமதி உள்ளிட்ட பல தரவுகளின்படி, ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சீனப் பொருளாதாரம் கடந்த ஆண்டின் 4ஆவது காலாண்டு முதல் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. சீனத் தொழில்நிறுவனங்கள் நிலைமைக்கேற்ப வளரும் திறனை அதிகரித்துள்ளன. சீனப் பொருளாதார வளர்ச்சியின் உந்து ஆற்றல் பெரிதாக இருக்கும். இவ்வாண்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கான 6விழுக்காட்டை சீனா எட்டும் என இது வெளிக்காட்டியது.

2020ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 100லட்சம் கோடி யுவானைத் தாண்டியது. உலகப் பொருளாதாரத்தின் பங்குகளில் இது 17விழுக்காட்டுக்கு மேல் இருக்கக் கூடுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு, பொருளாதாரத்தின் சுமுகமான வளர்ச்சியை நிலைப்படுத்தி உறுதியற்ற நிலையில் இருக்கும் உலகப் பொருளாதாரத்துக்கு சீனா உறுதியான ஆதரவு அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.