70 நாடுகளின் ஆதரவு
2021-03-06 20:35:10

ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் 46ஆவது கூட்டத் தொடரில், 70 நாடுகளின் சார்பில், பெலாரஸ் 5ஆம் நாள், ஒரு கூட்டு உரை நிகழ்த்துகையில், ஹாங்காங் விவகாரம், சீனாவின் உள்விவகாரங்களில் ஒன்றாகும். இதில் வெளிப்புற சக்திகள் தலையிடக் கூடாது என்று வலியுறுத்தியது. தவிரவும், 20க்கும் அதிகமான நாடுகள் ஹாங்காங் விவகாரத்தில் சீனாவின் நடவடிக்கைகளுக்குத் தனித்தனியாக ஆதரவு தெரிவித்தன.

மேலும், கூடுதலான நாடுகள் நியாயமான நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளன. கடந்த ஜூன் திங்கள், ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் 44ஆவது கூட்டத் தொடரில், 50க்கும் அதிகமான நாடுகளின் சார்பில், கியூபா ஒரு கூட்டு உரை நிகழ்த்துகையில், ஹாங்காங்கில் தேசியப் பாதுகாப்பை பேணிக்காப்பதற்கான சட்டத்தை சீனா ஏற்றுக்கொள்ளதற்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியது. கடந்த அக்டோபர் திங்கள், 75ஆவது ஐ.நா. பொது பேரவையின் 3ஆவது கமிட்டி கூட்டத்தில், 57 நாடுகள் ஹாங்காங் பிரச்சினையில் சீனாவுக்கு கூட்டாக ஆதரவு அளித்தன.

ஆனால், சில மேலை நாடுகள், மனித உரிமை, ஜனநாயகம், தாராளம் ஆகிய சாக்குப்போக்குகளின் மூலம் ஹாங்காங்கின் அமைதியையும் சீனாவின் வளர்ச்சியையும் சீர்குலைக்க முயன்று வருகின்றன. ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பை பேணிக்காப்பதற்கான சட்டம் அமலாக்கப்பட்ட பின், ஹாங்காங் அரசியல், சமூகம், மக்கள் வாழ்க்கை ஆகியவை நிதானமாக இருந்து வருகின்றது. இதைத்தான் ஹாங்காங் மக்களும் விரும்புகிறார்கள். இது சர்வதேச சமூகத்தின் பொதுவான எதிர்பார்ப்பாகும்.

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தேர்தல் அமைப்பு முறையை மேம்படுத்துவதற்கான சீனத் தேசிய மக்கள் பேரவையின் வரைவுத் தீர்மானம் பரிசீலனைக்காக, 13ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவதுக் கூட்டத் தொடரில் ஒப்படைக்கப்பட்டது. இது ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஹாங்காங்கின் நீண்ட கால அமைதிக்கும், நிதானம் மற்றும் செழிப்பான வளர்ச்சிக்கும் நல்ல ஆதரவை வழங்கும்.