சின்ஜாயாங்கின் சாதனைகளால் தோல்வியடைந்த அனைத்து வதந்திகள்
2021-03-07 21:45:11

கருத்தியல் சார் தப்பு எண்ணம், சின்ஜியாங்கைக் கொண்டு சீனாவைக் கட்டுப்படுத்துவது ஆகிய அரசியல் நோக்கங்கள் காரணமாக, ஓரிரு மேலை நாட்டு நிறுவனங்களும் தனிநபர்களும் கள பயணங்கள் மற்றும் உறுதியான சாட்சியங்கள் இல்லாமல், இனப்படுகொலை, கட்டாய உழைப்பு ஆகிய பொய்க் கூற்றுகளை உருவாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து மேலை நாட்டு செய்தி ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இந்த பொய்களைப் பயன்படுத்தி, சர்வதேச சமூகத்தில் அவதூறு பரப்பி, சின்ஜியாங்கில் அமைதியை சீர்குலைத்து, சீன வளர்ச்சியை தடுக்க முயன்று வருகின்றனர்.

ஆனால், கடந்த 40 ஆண்டுகளில், சின்ஜியாங் உய்கூர் மக்கள் தொகை இரு மடங்கு அதிகரித்துள்ளது. 2010ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை, சின்ஜியாங் உய்கூர் மக்கள் தொகை 25 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மேலும், மக்களின் வாழ்க்கைத் தரம் மனித உரிமை நிலைமையை பிரதிபலிக்கிறது. 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, சின்ஜியாங்கில் நகர்ப்புறவாசிகளின் தனிநபர் வரி போக வருமானம் 23,200 யுவானிலிருந்து 34,700 யுவானாக அதிகரித்தது.

இவை அனைத்தும் சின்ஜியாங்கின் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன.

சர்வதேச சமூகத்தின் பொதுக் கருத்தாகவும் இது உள்ளது. ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் 46ஆவது கூட்டத் தொடரில், பல நாடுகள் சின்ஜியாங் பிரச்சினையில் சீனாவுக்கு ஆதரவு தெரிவித்தன.

ஓரிரு மேலை நாடுகளின் பொய்க் கூற்றுகளை சர்வதேச சமூகம் கண்டறிந்துள்ளது. சீனாவின் சின்ஜியாங்கின் கதவு எப்போதும் திறந்திருக்கும். நேர்மையான எண்ணத்துடன் வெளிநாட்டு மக்கள் சின்ஜியாங்கில் பயணம் மேற்கொள்வதை சீனா வரவேற்கிறது. சின்ஜியாங் சாதனைகள் அனைத்து வதந்திகளையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.