சீனாவின் தடுப்பூசி உலக மக்களின் தடுப்பூசியாகும்
2021-03-08 19:31:49

உலகளவில் பல கோவிட்-19 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தொற்று நோய் தடுப்பு பணிகளில் இது புதிய விடியலைக் கொண்டு வந்துள்ளது. ஆனால், தடுப்பூசி தேசிய பாதுகாப்புவாதம், அரசியல் மயமாக்கம் ஆகிய செயல்கள் மூலம், சில நாடுகள் உலக தொற்று நோய் தடுப்பு ஒத்துழைப்பை சீர்குலைத்து வருகின்றன.

இது குறித்து, 13வது சீன தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரின் செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறுகையில், பல்வேறு நாட்டு மக்கள் தடுப்பூசிகளைப் பெறச் செய்யும் வகையில் அனைத்து திறமையான நாடுகளும் தங்களால் இயன்ற அளவில் முயற்சி செய்து. இதனை மக்களின் தடுப்பூசியாக மாற்ற வேண்டும் என்றார்.

சீனாவின் 17 தடுப்பூசிகள் மருந்தகச் சோதனை கட்டத்தில் இருப்பது, 60க்கும் அதிகமான நாடுகள் சீன தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது, 69 வளரும் நாடுகளுக்கு தடுப்பூசி உதவியை இலவசமாக வழங்கியுள்ளது, 43 நாடுகளுக்கு தடுப்பூசி விற்பனை செய்வது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு அமைதி காப்பு படைவீரர்களுக்கும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கும் தடுப்பூசி வழங்குவது ஆகியவற்றில், எதார்த்த நடவடிக்கைகளின் மூலம், சீனா உலகிற்கு அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சமூக ஊடக பயனர் ஒருவர் கூறுகையில், பல நாடுகள் சீனாவின் தடுப்பூசிகளுக்காகக் காத்திருக்கின்றன. சீனாவின் தடுப்பூசிகளை இழிவுபடுத்தும் எதிர்மறையான செய்திகளை யாரும் நம்ப மாட்டார்கள் என்றார்.