உலகின் வளர்ச்சிக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கும் சீனாவின் திறப்பு
2021-03-09 20:16:39

உள்நாட்டு சந்தையை அடிப்படையாகக் கொண்டு, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையின் இரட்டை சுழற்சிமுறையை இசைவாக வளர்க்கும் புதிய நிலைமையை உருவாக்க வேண்டும் என்று கடந்த மே திங்கள் முதல் சீன மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தற்போது, இரட்டை சுழற்சி முறை குறித்து மீண்டும் விறுவிறுப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

சீனா உள்நாட்டு சந்தையின் திறனை முழுமையாக வெளிக்கொணர்ந்து, உயர் தரமான சந்தையை உலகிற்கு வழங்கும் என்று இவ்வாண்டின் சீன அரசு பணியறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த 5 ஆண்டுகளில், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ காப்புறுதி, ஓய்வூதியம் ஆகிய துறைகளில் விரிவான திட்டங்களை உருவாக்கி, பல வழிகள் மூலம் குடிமக்களின் வருமானத்தை சீன அரசு அதிகரிக்க உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, சீன சந்தையின் உள்ளார்ந்த ஆற்றலை அதிகமாக்த் தேடினால், மேலதிக வாய்ப்புகள் தோன்றும்.

மேலும், தேசியப் பொருளாதாரத்தின் நல்ல சுழற்சியை உருவாக்கும் போக்கில், சீனா, தொழில் ஏகபோகத்தையும் உள்ளூர் பாதுகாப்பையும் உடைத்து, சீர்திருத்தத்தையும் திறப்பையும் பெரிதாக்க வேண்டும். இது வெளிநாட்டு நிறுவனங்கள் சீன சந்தையைப் பகிர்ந்து கொள்ளவும், கட்டுமானத்தில் பங்கேற்கவும் அதிக வாய்ப்புகளை வழங்கும் என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக் கமிட்டியின் உறுப்பினர் ஒருவர் கூறினார்.

வலுவான உள்நாட்டு சந்தையை உருவாக்குவதற்கும், தொடர்ந்து திறப்பை விரிவுபடுத்துவதற்கும் இடையில் எவ்விதக் குழப்பங்களும் இல்லை, மாறாக, பரஸ்பர முன்னேற்றம் உண்டு. 2020ஆம் ஆண்டில், கோவிட்-19 பரவலிலும், உலக முதலீட்டு சரிவிலும், சீனா பயன்படுத்திய நேரடி அன்னிய முதலீட்டு தொகை  6.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டைப் பெற்ற நாடாக சீனா மாறியுள்ளது. இந்த சாதனைகளில் சீனாவின் தொடர்ச்சியான திறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.