உயிர்ப்பு ஆற்றல் கொண்ட சீனாவின் ஜனநாயக அரசியல்
2021-03-10 20:06:31

ஆண்டுதோறும் நடைபெறுகின்ற சீனாவின் இரு கூட்டத்தொடர், சர்வதேசச் சமூகம் சீனாவின் கொள்கைகளை அறிந்து கொள்ளும் ஒரு திசைகாட்டியாகவும், சீன ஜனநாயக நடைமுறையை உலகம் பார்க்கும் முக்கிய ஜன்னலாகவும் திகழ்கின்றது.

சீன தேசிய மக்கள் பேரவையைச் சேர்ந்த சுமார் 3000 பிரதிநிதிகளும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக் கமிட்டியின் 2000க்கும் மேலான உறுப்பினர்கள் இவ்வாண்டின் இரு கூட்டத்தொடரில் பங்கெடுத்தனர். அடுத்த 5 முதல் 15 ஆண்டுகள் வரையான சீனாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட முக்கியக் கருத்துருகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து அவர்கள் விவாதம் நடத்தி பரிசீலனை செய்தனர். சீனாவில் ஜனநாயகத்தின் உயிர்ப்பு ஆற்றலை இது மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.

நாட்டின் நிலைமைக்குப் பொருந்திய ஜனநாயக அமைப்புமுறை, நம்பகத்தக்க மற்றும் பயனுள்ள ஒன்று என்பதை அதிகமான உண்மைகள் நிரூபித்துள்ளன. "மக்கள், நாட்டின் உரிமையாளராக இருப்பது” என்பதை மையமாகக் கொண்ட சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச ஜனநாயக அரசியல், சீன மேலாண்மை முறைமைக்கான நவீனமயமாக்கத்துக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது.

அதிகாரிகள், தொழில் முனைவோர்கள், தொழில் நுட்பம் மற்றும் கல்வித் துறையினர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் முதலியோர் இரு கூட்டத்தொடரில் பங்கெடுத்த இப்பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், சீனச் சமூகத்தில் பல்வேறு துறைகளின் கவனங்கள், அரசு விவகாரங்களை விவாதிக்கும் மிக முக்கிய மேடைக்குக் கொண்டு செல்லப்பட முடியும். நாட்டின் கொள்கை முடிவை இது முன்னேற்றி வருகிறது.

உயர்வேகப் பொருளாதார வளர்ச்சி, சமூகத்தின் நீண்டகால நிலைப்புத் தன்மை ஆகிய இரு விந்தைகளைச் சீனா எப்படி உருவாக்கியது என்ற கேள்விக்கு சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச ஜனநாயக அரசியல் பதிலாக அமைகின்றது. மனித அரசியல் நாகரிக முன்னேற்றத்துக்கு இது சீனாவின் அறிவுத்திறமையை வழங்கியுள்ளது.