சீன அரசின் மீது மக்கள் அதிக மனநிறைவு பெறுவதற்கான காரணம் என்ன?
2021-03-12 21:29:31

கடந்த சில ஆண்டுகளில் சர்வதேச நிறுவனங்கள் நடத்திய பொது மக்கள் கருத்து கணிப்புகளில் சீன அரசின் மீதான சீன மக்களின் ஆதரவு விகிதம் உலகளவில் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு காரணம் என்ன? 11ஆம் நாள் நடைபெற்ற சீனத் தலைமை அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பில் இது பற்றி அறிந்து கொள்ள உலகிற்கு ஜன்னல் ஒன்று வழங்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வழங்கப்பட்ட பெரும்பாலான அம்சங்கள் மக்கள் வாழ்க்கையுடன் தொடர்பானவை. சீன வளர்ச்சியின் அடிப்படை இலக்கு, சீன மக்கள் நல்ல வாழ்க்கை நடத்துவதே ஆகும் என்பது, இச்சந்திப்பில் வெளியிடப்பட்ட தெளிவான தகவல். இது, சீனாவின் உச்சநிலை அதிகார நிறுவனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 14ஆவது ஐந்தாண்டு திட்டவரைவிலும் 2035 நீண்டகால இலக்கு பணித்திட்டத்திலும் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் பாதையில் அனைவரையும் சேர்க்க சீனா முயற்சி செய்து வருகிறது. மேலும் பெரும் சமூக காப்புறுதி முறைமை, மேம்பட்டு வரும் பொது நலச் சேவை ஆகியவற்றின் மூலம் சீனா அனைவருக்கும் உத்தரவாதம் அளித்து வருகிறது.

பொது சுகாதார நெருக்கடியின் போது மக்களின் உயிர் பாதுகாப்பையும், பொருளாதார மீட்சியில் வேலை வாய்ப்புக்கான உத்தரவாதத்தையும், எதிர்கால வளர்ச்சித் திட்டத்தில் மக்கள் வாழ்க்கை மேம்பாட்டையும் முதலிடத்தில் வைப்பது, மக்களே முதன்மை என்ற சீனாவின் கோட்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இது சீன அரசின் மீது மக்கள் பல ஆண்டுகளாக உயர் மனநிறைவு பெற்று வருவதற்கான அடிப்படை காரணமாகும்.