சர்வதேசச் சமூகத்தின் நலனுக்குப் பொருந்திய ஹாங்காங் தேர்தல் அமைப்பு முறையின் மேம்பாடு
2021-03-12 21:18:36

சீன அரசு மார்ச் 12ம் நாள் செய்தியாளர் கூட்டம் நடத்தி, ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தேர்தல் அமைப்பு முறையை மேம்படுத்துவது பற்றி அறிமுகம் செய்தது. இவ்வமைப்பு முறையை மேம்படுத்துவது, பல்வேறு தரப்புகளுக்குத் துணைப் புரியும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் பாதுகாப்பின் மூலம் தேசத்தின் பாதுகாப்பைப் பேணிக்காப்பது, உலகத்தின் பல்வேறு நாடுகளின் செயலாகும்.

ஹாங்காங்கின் தேர்தல் அமைப்பு முறையை மேம்படுத்தினால் தான், ஹாங்காங் சமூகத்தின் பொது நலனைப் பேணிக்காத்து, ஹாங்காங் அரசும் பல்வேறு துறைகளும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியும். மேலும், இப்படிச் செய்தால் தான் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்.

ஹாங்காங் ஆராய்ச்சி சங்கம் வெளியிட்ட பொது மக்கள் கருத்துக் கணிப்பின்படி, 70 விழுக்காட்டுக்கும் மேலான மக்கள், ஹாங்காங் தேர்தல் அமைப்பு முறையை மேம்படுத்துவதற்கு ஆதரவு அளிக்கின்றனர். ஹாங்காங் பற்றிய சீன மத்திய அரசின் கொள்கைகள் பரந்துபட்ட மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது.