ஹாங்காங் தேர்தல் அமைப்பு முறையின் மேம்பாடு: ஜனநாயகம் மீதான பேணிகாப்பு
2021-03-13 18:43:16

ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் தேர்தல் அமைப்பு முறை பற்றிய தீர்மானம் சீனத் தேசிய மக்கள் பேரவையில் 11ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் சில அரசியல்வாதிகள் இது தொடர்பாக அவதூறு கூறினர். ஜனநாயத்தை சாக்குப்போக்காக கொண்டு, ஜனநாய அமைப்பு முறை மீது மீண்டும் நடத்தப்படும் தாக்குதல் இதுவாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

உண்மையில், ஹாங்காங் தாய்நாட்டுக்கு திரும்பிய பின், அதற்கு ஏற்ற ஜனநாயக அமைப்பு முறையை படிப்படியாக வளர்ப்பதை சீன நடுவண் அரசு உறுதியாக ஆதரித்து வருகிறது. ஹாங்காங்கை குழப்பமாக்கும் சக்திகளும், சீனாவுக்கு எதிரான சக்திகளும், ஹாங்காங் ஜனநாயக அமைப்பு முறையின் வளர்ச்சியைத் தடுப்பவராகவும், சீர்குலைப்பவராகவும் இருக்கின்றனர்.

ஹாங்காங் சீனாவின் ஒரு நிர்வாக பிரதேசமாகும். சீனாவின் அதியுயர் அதிகார அமைப்பான சீனத் தேசிய மக்கள் பேரவை, அரசியல் அமைப்பு முறை துறையில் ஹாங்காங் தேர்தல் அமைப்பு முறையை மேம்படுத்துவது, ஹாங்காங்கின் ஜனநாயக அமைப்பு முறையை பெரிதும் பேணிகாப்பதற்காகும்.

உலகளவில் ஜனநாயகத்தின் வளர்ச்சி, பல மாதிரிகளைக் கொண்டுள்ளது. உண்மைக்கு ஏற்ற ஜனநாயக அமைப்பு முறையைத் தெரிவு செய்யும் உரிமை பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு உண்டு. ஹாங்காங்கின் உண்மைக்கு ஏற்ற, ஹாங்காங் சமூகத்தின் பன்முக நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஹாங்காங்கின் செழுமை மற்றும் நிதானத்தை விரைவுபடுத்தி, ஹாங்காங் நகரவாசிகளின் ஆதரவை பெற்ற ஜனநாயக அமைப்பு முறை, நல்ல அமைப்பு முறைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.