ஜி 7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டறிக்கை பயனில்லை
2021-03-14 16:03:49

ஜி 7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டறிக்கை பயனில்லை_fororder_src=http-%2F%2Fn.sinaimg.cn%2Fsinakd202139s%2F148%2Fw1080h668%2F20210309%2Fef02-kmeeius2104147&refer=http-%2F%2Fn.sinaimg

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தேர்தல் அமைப்பு முறையை மேம்படுத்துவது பற்றிய திருத்தத்தை சீன அதியுயர் அதிகார அமைப்பு அங்கீகரித்தது. இது குறித்து 12ஆம் நாள், ஜி 7 நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இவ்வறிக்கையில் சீன அரசின் இத்தீர்மானம், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தன்னாட்சி நிலையை மாற்றியது என்று அவர்கள் ஜனநாயகம் என்ற பெயரில் அவதூறு கூறினர். சீன-பிரிட்டன கூட்டறிக்கையைப் பின்பற்றி செயல்படுத்த வேண்டும் என்று இவ்வறிக்கை வேண்டுகோள் விடுத்தது.

பிரிட்டன் ஆக்கிரமிப்பில் இருந்த 150 ஆண்டு காலத்தில், ஹாங்காங் மக்களுக்கு ஆர்ப்பாடம் மேற்கொள்ள எந்த உரிமை கிடைக்கவில்லை. அப்போது ஐனநாயகம் எங்கே? ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய பிறகு, ஒரு நாட்டில் இரு அமைப்பு முறைகளை மேற்கொள்வது, ஹாங்காங் மக்கள் ஹாங்காங்கை நிர்வகிப்பது ஆகிய கொள்கைகளால், ஹாங்காங் மக்கள், முன்பு கண்டிராத ஜனநாயக உரிமையையும் சுதந்திரத்தையும் பெற்றனர்.

தேசிய பாதுகாப்பு ஆபத்தை நீக்கி, ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் அரசியல் நிதானத்தைப் பேணிக்காக்கும் வகையில், சீன அதியுயர் அதிகார அமைப்பான சீன தேசிய மக்கள் பேரவை, அரசியல் அமைப்பு சட்டம் கோணத்திலிருந்து இப்படி செய்தது. இந்நடவடிக்கை, ஹாங்காங் ஜனநாயக அமைப்பு முறையின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் தன்னாட்சி தகுநிலையைப் பேணிக்காப்பதற்கும் துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.