© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இந்திய சுகாதார அமைச்சகம் 13ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24882 அதிகரித்துள்ளது. இப்போது வரை மொத்தமாக 1 கோடியே 13 இலட்சியத்துக்கு 33 ஆயிரத்து 728 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சமீபத்தில் 140 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 58 ஆயிரத்து 446 ஆகும்.
பிப்ரவரி தொடக்கம் முதல், கட்டுப்பாடு தளர்வு மற்றும் பயணத்தால், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.