அரசியல் நோக்கத்துடன் சின்ஜியாங் மீது பழிபோடும் மேலை நாடுகள்
2021-03-15 19:30:32

சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கிறது என கூறிய பிரான்ஸ் புகழ்பெற்ற அறிஞர் கிறிஸ்டியன் மேஸ்ட்ரே நிர்ப்பந்தத்துடன் பதவியிலிருந்து விலகினார். கருத்துச் சுதந்திரம் கொண்ட மேலை நாடுகளில், இது ஒரு கேலிக் கூத்தான விஷயமாகும்.

இந்தச் சம்பவம் அரசியல் நோக்கத்துடன் நடைபெற்றது. புறநிலையாக இல்லை என்று தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

சின்ஜியாங் விவகாரங்களைப் பயன்படுத்தி, சீனாவை எதிர்க்கும் நோக்கில், மேலை நாடுகளின் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள், சின்ஜியாங் தொடர்புடைய பல பொய் கூற்றுகளை உருவாக்கி, உண்மைகளைத் தெரிவித்த பிரமுகர்கள் மற்றும் ஊடகங்களைப் பழி வாங்கி வருகின்றனர்.

தீமை நீதியை ஒருபோதும் தோற்கடிக்காது. மேலை நாடுகளைச் சேர்ந்த சிலர் சின்ஜியாங் மீது பழி கூறினாலும், மேலதிகமான சர்வதேச அறிஞர்கள் மற்றும் ஊடகப் பிரமுகர்கள் உண்மைகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலை நாடுகளிலுள்ள கருத்துச் சுதந்திரம் என்பது, வெறும் அரசியல் நோக்கத்துக்குச் செயல்படும் கருவி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.