ஹாங்காங் மீதான அமெரிக்காவின் தடைக்கு பயன் கிடைக்காது
2021-03-17 19:23:53

ஹாங்காங்கின் உயர் தன்னாட்சி முறையை கெடுக்கும் வகையில் செயல்படுவதாக கூறி சீன அதிகாரிகள் சிலர் மீது அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் 17ஆம் நாள் தடை நடவடிக்கை மேற்கொண்டது. இந்த செயல், சீனாவின் உள்விவகாரங்களில் கடுமையாகத் தலையிட்டு, சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவின் அடிப்படை விதியை மீறுவதாகும். இதனால், பயன் ஒன்றும் ஏற்படாது.

அமெரிக்காவின் இச்செயல் சீன-அமெரிக்க உறவு சரியான பாதைக்குத் திரும்புவதற்குத் தீங்கு விளைவிக்கும் என்பது தெளிவாக காணப்படுகிறது.

இத்தடை நடவடிக்கைக்கு சீனா தக்க பதிலடி கொடுத்து, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களை உறுதியாக பேணிக்காக்கும். சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவின் அடிப்பட விதிக்கான பயனுள்ள மதிப்பும், ஆதிக்கவாதச் செயலை சீனா வலிமையாக எதிர்க்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.