உலக கரோனா தடுப்பூசி பகிர்வு நிலைமை
2021-03-18 18:20:47

அண்மையில், சீன கரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட மெக்சிகோ அரசுத் தலைவர் லோபெஸ் அப்ராடர் சீனாவுக்கு நன்றி தெரிவித்தார். வெகுவிரைவில், அமெரிக்காவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அமெரிக்காவும் மெக்சிகோவுக்கு உதவி அளிக்கும் என்று நம்புகிறேன். ஆனால் இப்போது வரை அமெரிக்கா மெக்சிகோவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். முன்னதாக நாங்கள் அமெரிக்காவின் அருகில் இருக்கிறோம். ஆனால் நாங்கள் கரோனா தடுப்பூசிக்கும் எங்களுக்கும் இடையிலான தொலைவு மிக அதிகம் என்று மெக்சிகோ செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.

அமெரிக்காவின் செயல், கரோனா தடுப்பூசி தேசியவாதமாகும். ஐ.நாவின் புள்ளிவிவரங்களின் படி, இப்போது 10 நாடுகள், உலகின் 75 விழுக்காடான கரோனா தடுப்பூசிகளைக் கொள்கின்றன.

பொறுப்பு ஏற்கும் சீனா, முயற்சியுடன் பல்வேறு நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை சமமாக வினியோகித்து, கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணியில் உலக அளவில் பங்காற்றி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.