அமெரிக்கா மற்றும் ஜப்பானின் தவறான தேர்வு
2021-03-18 13:20:53

ஜப்பான்-அமெரிக்கப் பாதுகாப்பு ஒப்பந்தக் குழு கூட்டத்தின் உண்மையான  கதாநாயகனாக சீனா மாற்றியுள்ளது. இக்கூட்டத்தின் வழி, கூட்டணி நாடுகளுடன் சீனாவைக் கட்டுப்படுத்த முயலும் அமெரிக்காவின் நோக்கமும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு சீனக் கடல், தென் சீனக் கடல், தியோயூ தீவு, தைவான் நீரிணை, சின்ஜியாங், ஹாங்காங் உள்ளிட்ட இப்பேச்சுவார்த்தையின் பெரும்பாலான உள்ளடக்கங்கள் சீனாவுடன் தொடர்புடையன என்று ஜப்பான் வெளியுறவு அமைச்சர் கூறினார். இரு தரப்பும் வெளியிட்ட கூட்டறிக்கையில், சீனாவின் நடவடிக்கைகள் சர்வதேச ஒழுங்கிற்கு ஏற்றதாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிக்கை உண்மைக்குப் புறம்பான ஒன்றாகும்.

இதனிடையில் விரைவில் நடைபெற உள்ள சீன-அமெரிக்க உயர் நிலை பேச்சுவார்த்தையில் தனக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்குவது அமெரிக்காவின் நோக்கமாகும். சீனாவிற்கு எதிரான வலிமையை வெளிப்படுத்துவது, ஜப்பானிய அமைச்சரவை தனது ஆதரவு விகிதத்தை அதிகரிப்பதற்கான அரசியல் தேவையாகும். ஆனால், இத்தகு நடவடிக்கைளின் வழி இரு நாடுகளும் தவறான திசையைத் தேர்ந்தெடுத்துள்ளன.

சீனாவின் வளர்ச்சி உலகிற்குச் சவாலாக இல்லாமல் வாய்ப்பாகவே இருக்கின்றது. இதனை அங்கீகரிக்காத அமெரிக்காவும் ஜப்பானும் தங்கள் சொந்த வளர்ச்சியைத் தடுப்பதோடு, பிரதேச வளர்ச்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.