பொய் கூற்றுகளைப் பரப்பும் ஜெர்மன் நாட்டவருக்கு கண்டனம்!
2021-03-19 20:37:30

அக்ரியன் சேன்ஸ் பொய் கூற்றுகளைப் பேச வேண்டாம் என்று 18ஆம் நாள் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் சின்ச்சியாங்கின் காஷ் நகரைச் சேர்ந்த குல்போஸ்டன் ரோஸ் கோபத்துடன் தெரிவித்தார்.

அக்ரியன் சேன்ஸ் யார்? அவர் ஜெர்மன் நாட்டவர் ஆவார். கடந்த சில ஆண்டுகளாக, அவர் அறிஞர் என்ற பெயரில் சர்வதேச அரங்கில் செயல்படுவதுண்டு. அவர் சீனாவுக்கு எதிரான ஒர் ஆய்வகத்தின் முக்கிய உறுப்பினராக இருக்கிறார். சீனாவை எதிர்ப்பது அவரது வேலையாகும்.

2018ஆம் ஆண்டு முதல், சின்சியாங் பற்றி அவதூறு பரப்பி பத்துக்கும் அதிகமான கட்டுரைகள் மற்றும் அறிக்கைகளை அவர் அடுத்தடுத்து வெளியிட்டுள்ளார். இவை, மேலை நாடுகளில் சீனாவுக்கு எதிரான சக்திகளின் பாராட்டைப் பெற்றுள்ளன. இந்நிலையில் அந்நாடுகளில் சின்ச்சியாங் பற்றி அறிந்து கொள்ளாத பொது மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

அதோடு, சின்ச்சியாங்கில் உள்ள மேலதிக பிரமுகர்கள் அக்ரியன் சேன்ஸின் கூற்றுகளை மறுத்துள்ளனர். 18ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சின்ச்சியாங்கைச் சேர்ந்த அரசு அலுவலர்கள், மதத் துறையினர் மற்றும் பொது மக்கள் உண்மைகள் மற்றும் தங்களது அனுபவங்களின் மூலம், அவரது பொய் கூற்றுகளை மறுத்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அவரது பொய் கூற்றுகள் குறித்து, சின்ச்சியாங்கின் ஒரு பகுதி தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் சட்டத்தைச் சார்ந்து, தங்களது புகழ் மற்றும் உரிமை நலன்களைப் பேணிகாப்பர். அக்ரியன் சேன்ஸ் மற்றும் அவரை ஆதரிக்கும் சீனாவுக்கு எதிரான சக்திகள், நீதியான விசாரணையை எதிர்நோக்குவர்.