சீன-அமெரிக்கப் பேச்சுவார்த்தையில் சீனாவின் ஆக்கப்பூர்வ மனப்பான்மை
2021-03-20 20:20:07

சீன மற்றும் அமெரிக்க உயர் நிலை நெடுநோக்குப் பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அலாஸ்காவில் நிறைவடைந்தது. பைடென் அமெரிக்க அரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு, நேருக்கு-நேர் நடைபெற்ற முதலாவது பேச்சுவார்த்தை இதுவாகும்.

இப்பேச்சுவார்த்தையில், சீனா மூன்று சமிக்கைகளைத் தெளிவாக வெளியிடுகிறது.

முதலாவது, இப்பேச்சுவார்த்தையில் சீனா கலந்து கொள்ளும் நோக்கம் பிரச்சினைகளைத் தீர்ப்பதானே. தவரி, வாக்குவாதம் அல்ல.

அடுத்து, இரு தரப்புகளுக்குமிடையில் முக்கியமான வேறுபாடுகள் உள்ள போதிலும், அமெரிக்காவுடன் நடைமுறை ஒத்துழைப்பைத் தேடச் சீனா இன்னும் பாடுபட்டு வருகின்றது. அமெரிக்கா மற்றும் உலகின் நலன்கள் மீதான சீனாவின் உயர் பொறுப்பை இது காட்டுகிறது.

மூன்று, உண்மையான பலதரப்புவாதத்தைச் சீனா உறுதியாகப் பேணிக்காத்து வருகின்றது.

ஐ.நா.வை  மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்பு முறையையும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கையும் இப்பேச்சுவார்த்தையில் சீனா மீண்டும் வலியுறுத்தியது