மனித உரிமை பாதுகாப்பில் வெறும் பேச்சோடு நின்றுவிடக் கூடாது
2021-03-22 19:10:41

அண்மையில் அமெரிக்காவின் பல இடங்களில் ஆசியர் வெறுப்பை எதிர்க்கும் விதம் ஊர்வலம் நடைபெற்றது. குடியேறுவோர் உருவாக்கிய நாடு, அமெரிக்கா ஆகும். ஆனால் 2020ஆம் ஆண்டு மார்ச் முதல், அமெரிக்காவில் ஆசியர்களின் மீதான இனப் பாகுபாட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை 3700க்கும் அதிகமாகும்.

இந்நிலையில் இனவெறி பிரச்சினையைத் தீர்த்து, அமெரிக்கர்களின் மனித உரிமையைப் பாதுகாக்கும் நடைமுறை செயல்களை அமெரிக்க அரசின் அதிகாரிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. “அமெரிக்க மனித உரிமை”என்ற போலியான போர்வையை இதன் மூலம் அகற்றப்பட்டுள்ளது. அமெரிக்க அரசியல்வாதிகள் மனித உரிமையைத் தொடர்ந்து சாக்குபோக்காகக் கொண்டு, மேலாதிக்கவாதத்தைப் பிடித்து, மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு, உள்நாட்டின் சிறுபான்மை தேசிய இன மக்களின் கோபத்தைப் பொருட்படுத்தாமல் செயல்பட்டால், அமெரிக்கச் சமூகம் மேலும் கடுமையான பிரிவினையை எதிர்கொள்ளவே நேரிடும்.