சின்ஜியாங் மக்கள் சுயமாக வேலை தேடுவது மிக வெற்றிகரமான மனித உரிமைக் கதைகளில் ஒன்றாகும்
2021-03-24 20:27:45

"கட்டாய உழைப்பு" அல்லது "சிறந்த வாழ்க்கையை நாடுவது" ---வெளியூரில் பணிபுரியும் சின்ஜியாங் தொழிலாளர்களின் நிலைமை குறித்த ஆய்வு அறிக்கையை சீன ச்சினா பல்கலைக்கழகம் 23ஆம் நாள் வெளியிட்டது. கள ஆய்வுக்குள்ளாகிய 46 விழுக்காட்டுத் தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்காக தொழில் நிறுவனங்களில் தொடர்ந்து வேலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். 31 விழுக்காட்டுத் தொழிலாளர்கள், சொந்த ஊருக்குத் திரும்பி, சேமிப்புத் தொகையின் உதவியுடன் தொழில் புரியத் திட்டமிட்டுள்ளனர்.

வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்வது என்பது சின்ஜியாங் மக்களின் சுய தேர்வாகும். கூறப்படும் "கட்டாய உழைப்பு" உள்ளிட்ட பிரச்சினைகள் இல்லை. வெளியூரில் வேலை செய்வது அவர்களின் வாழ்க்கைக்குத் தெளிவான மேம்பாட்டைக் கொண்டு வந்துள்ளது. இது உலகில் மிக வெற்றிகரமான மனித உரிமைக் கதைகளில் ஒன்றாகும்.