ஐரோப்பியத் தரப்பின் தடைக்கு சீனாவின் பதில் நடவடிக்கை
2021-03-24 10:27:05

சீனாவின் அரசுரிமை மற்றும் நலன்களைக் கடுமையாக சீர்குலைத்து, பொய் கூற்றுகள் மற்றும் தகவல்களை பரப்பிய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு நிறுவனங்கள் மீது தடை நடவடிக்கை மேற்கொள்வதாக சீன வெளியுறவு அமைச்சகம் 22ஆம் நாள் அறிவித்தது. மனித உரிமை துறையின் முன்மாதிரியை தன்னைப் பாராட்டிய நாடுகளுக்கு பதில் அளிக்கும் தேவையான நடவடிக்கை இதுவாகும். நாட்டின் அரசுரிமை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பேணிகாப்பதில் சீனாவின் மன உறுதியை இது வெளிப்படுத்தியுள்ளது.

சின்ச்சியாங்கின் மனித உரிமைப் பிரச்சினையைச் சாக்குப்போக்காக கொண்டு சீனா மீது தடை நடவடிக்கை மேற்கொள்வதாக ஐரோப்பிய தரப்பு அறிவித்தது, எனவே இதற்கு உறுதியான பதில் அளிக்க வேண்டும் என்று சீனா தெரிவித்தது.

சீனாவின் தடை பட்டியலில் சேர்க்கப்பட்ட தனிநபர் மற்றும் அமைப்புகள் பரப்பிய பொய் தகவல்களை, மேலை நாட்டு அரசியல்வாதிகள் சீனாவுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர். ஏனெனில் அவர்கள் உண்மையிலும், சின்ச்சியாங்கின் மனித உரிமை நிலைமையிலும் கவனம் செலுத்தாமல், சீனாவின் வளர்ச்சி மற்றும் சீன மக்களின் இன்பமான வாழ்க்கை நிலைமையைக் காண விரும்பவில்லை.

சின்ச்சியாங்கின் பொது மக்கள், நிதானம், பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை அனுபவிக்கின்றனர். அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள், தங்களது மனித உரிமை பிரச்சினையை முறையாக கையாள வேண்டும். இரட்டை வரையறையைப் பின்பற்றி, பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று சீனா வற்புறுத்துகிறது.