உலகளவில் மனித உரிமை பேரழிவுகளின் பிறப்பிடமாக விளங்கும் நாடு அமெரிக்கா
2021-03-24 21:08:18

2020ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையைச் சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 24ஆம் நாள் வெளியிட்டுள்ளது. விரிவான உண்மைகள் மற்றும் தரவுகளின் மூலம் அமெரிக்காவில் மோசமாகி வருகின்ற மனித உரிமை நிலைமை காட்டப்பட்டுள்ளது. பிற நாடுகளின் மீது எளிதில் குற்றஞ்சாட்டி தடைகளை மேற்கொண்டு வருகின்ற வல்லரசான அமெரிக்கா, உலகளவில் மனித உரிமை  பேரழிவுகளின் மிகப்பெரிய பிறப்பு நாடாகவும் உலக பாதுகாப்பு மற்றும் நிதானத்துக்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் நாடாகவும் உள்ளது என்பதை இது உலகிற்கு தெளிவுபடுத்துகிறது.