சீன-ஐரோப்பிய முதலீட்டு ஒப்பந்தத்தை அரசியல் வசதியாக மாற்றுவதன் பயன் என்ன?
2021-03-25 20:32:24

சின்ஜியாங் தொடர்பான பொய்யைப் பயன்படுத்தி தடை நடவடிக்கைகளை அறிவித்த ஐரோப்பிய தரப்பின் மீது பதில் தடை நடவடிக்கைகளை சீனா அறிவித்துள்ளது. இது குறித்து சிலர் கோபம் அடைந்தனர். சீனாவின் மீது நிர்ப்பந்தம் திணிக்கும் வகையில், சீன-ஐரோப்பிய முதலீட்டு ஒப்பந்தத்தைப் பரிசீலிக்கும் அமைப்பை ஐரோப்பிய நாடாளுமன்றம் ரத்து செய்தது.

இந்த விவகாரம் குறித்து, இரு உண்மைகளைத் தெரிவிக்க வேண்டும்.

1, சீன-ஐரோப்பிய முதலீட்டு ஒப்பந்தம் இரு தரப்புகளுக்கும் நன்மை பயக்கும் ஒப்பந்தமாகும்.

2, தற்போது, சீனாவுக்கு எதிரான சில சக்திகள் சீன-ஐரோப்பிய ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பைச் சீர்குலைத்து வருகின்றன.

இந்நிலையில், பொருளாதார மற்றும் வர்த்தக விஷயங்களை அரசியல் மயமாக்கி, சீன-ஐரோப்பிய முதலீட்டு ஒப்பந்தத்தின் முன்னேற்றத்துக்குத் தடைகளை ஏற்படுத்துவது, ஐரோப்பிய தொழில் நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்ட வேண்டும்.