சின்ஜியாங் பற்றி மேலை நாட்டு அரசியல்வாதிகள் பரப்பும் வதந்தி பலிக்காது!
2021-03-27 16:34:07

சீனா பற்றி அவதூறு மற்றும் பொய் தகவல்களைப் பரப்பி வரும் பிரிட்டனைச் சேர்ந்த 9 பேர் மற்றும் 4 நிறுவனங்கள் மீது சீனா தடை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகச் சீன வெளியுறவு அமைச்சகம் 26ஆம் நாள் அறிவித்துள்ளது. சமீபத்தில், சின்ஜியாங் மனித உரிமைப் பிரச்சினையைச் சாக்குபோக்காகக் கொண்டு சீனாவுடன் தொடர்புடையவர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பிரிட்டன் தடை நடவடிக்கை மேற்கொண்டதற்கான பதிலடி நடவடிக்கை இதுவாகும். சின்ஜியாங்கின் வளர்ச்சி பற்றி அவதூறு கூறி சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடும் செயலைச் சீனா உறுதியாக எதிர்க்குமென இது வெளிக்காட்டியுள்ளது.

சமீபத்தில் சீனாவுக்கு எதிரான மேலை நாடுகளின் சக்தி சின்ஜியாங் மனித உரிமை பற்றி கடுமையாக அவதூறு செய்துள்ளது. சின்ஜியாங்கின் பருத்தி பயிரீட்டுத் தொழிலில் கட்டாய உழைப்பு நிலவுவதாக அவர்கள் அவதூறு பரப்பினர்.

சின்ஜியாங்கில் லட்சக்கணக்கான சின்ஜியாங் சிறுபான்மை தேசிய இனத்தவர்கள் பருத்தி வயலில் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர் என்ற முற்றிலும் பொய் தகவலை ஜெர்மனி வம்சாவழி அட்ரியன் ஜென்ஸ் பரப்பினார். இதற்கு பிறகு, பருத்தி வளர்ச்சிச் சங்கம் மற்றும் சில புகழ் பெற்ற சர்வதேச நிறுவனங்கள் சின்ஜியாங்கின் பருத்தியைப் பயன்படுத்தாது என தெரிவித்துள்ளன.

கட்டயா உழைப்பு சின்ஜியாங்கில் முற்றிலும் நிலவ இல்லை. மேலும், புள்ளிவிவரங்களின்படி, சின்சியாங்கின் பருத்தி 69.83விழுக்காடாக இயந்திரம் மூலம் எடுக்கப்படுகிறது.

சின்ஜியாங் நிதானத்தைச் சீர்குலைத்து வதந்தி பரப்புவதன் மூலம் சீனாவின் வளர்ச்சியை தடுக்க முயலும் மேலை நாடுகளின் சதி பலிக்காது.