© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
திபெத்தின் ஜனநாயக சீர்திருத்தத்தின் 62 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அப்பிராந்திய அரசுத் தலைவர் கிசாலா சனிக்கிழமை மாலை உள்ளூர் தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தினார். அப்போது திபெத் தன்னாட்சி பிரதேசத்தை சீனாவின் பிற பகுதிகளுடன்
அனைத்து வகைகளிலும் இணைத்து, வளமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் நவீனமயமாக்கலை நோக்கிய ஒரு புதிய பயணத்தை தொடங்குவதிலும் பிராந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகள் வேகம் எடுக்கும் என்று கூறினார்.
1959 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் நாள் அன்று, சீன கம்யூனிஸ்ட் கட்சி திபெத்தில் உள்ள மக்களுக்கு ஜனநாயக சீர்திருத்தத்தைத் தொடங்க வழிநடத்தியது, திபெத்தின் நிலப்பிரபுத்துவ அடிமை முறையை ஒழித்தது. 2009 ஆம் ஆண்டில், பிராந்திய சட்டமன்றம் ஒரு மில்லியன் அடிமைகளின் விடுதலை அடைந்ததை நினைவுகூரும் ஒரு நாளாக மார்ச் 28 ஐ அறிவித்தது.
திபெத்தில் உள்ள அடிமையாளர்களை விடுவித்து, சமூக அமைப்பில் கொண்டுவரப்பட்ட ஜனநாயக சீர்திருத்தம் ஒரு வரலாற்று சாதனையை குறிக்கிறது. இப்போது, வறுமை ஒழிப்பு உந்துதலுடன், பிராந்தியத்தின் 3.5 மில்லியன் மக்கள் மிதமான வளமான வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர். இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு வரலாற்று பாய்ச்சல் என்று கிசாலா கூறினார்.
இன்று, திபெத் வளர்ச்சிக்கான அடித்தளம் முன்னெப்போதையும் விட உறுதியானதாகவும், வளர்ச்சி வாய்ப்புகள் முன்னெப்போதையும் விட சிறந்தவையாகவும் வளர்ச்சியின் வேகம் முன்னெப்போதையும் விட வலுவானதாகவும் உள்ளன என்று அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் திபெத் ரயில்வே, விமான வழித்தடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான விரிவான வலைப்பின்னல்களை உருவாக்கியுள்ளது, மேலும் குழாய் நீர், மின்சாரம் மற்றும் கிராமங்கள் தோறும் வீடுகளில் இணைய வசதி கிடைக்கக்கூடியதாக உள்ளது, இப்பகுதி எதிர்கால வளர்ச்சிக்கு பெரும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
திபெத்தின் உழைக்கும் மக்கள் 10.2 ஆண்டுகள் கல்விப் பெற்றுள்ளனர் என்றும், பிராந்தியத்தில் சராசரி ஆயுட்காலம் 35.5 ஆண்டுகளில் இருந்து 71.1 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது என்றும் விவசாயிகள் மற்றும் ஆயர்கள் உணவு, உடை மற்றும் மருத்துவ சேவைகளைப் பற்றி கவலையின்றி சிறந்த வாழ்க்கையை வாழ்கின்றனர்" என்று அவர் கூறினார்.
திபெத் எப்போதும் சீனாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருக்கும், திபெத்தின் எதிர்காலம் பெரிய தாய்நாட்டின் எதிர்காலத்துடன் நெருக்கமாக தொடர்புடையது என்றும், அதன் வளர்ச்சியும் முன்னேற்றமும் தாய்நாட்டின் நிலைத்தன்மை மற்றும் செழிப்பிலிருந்து பிரிக்க முடியாதவை என்றும் கிசாலா கூறினார்.
பிராந்திய இன தன்னாட்சி முறையைக் கடைப்பிடிப்பதும், சீன தேசத்தின் அடையாள உணர்வை தொடர்ந்து உயர்த்துவதும் திபெத் மக்களிடையே நிலவும் பிரிவினைவாத எதிர்ப்பு விழிப்புணர்வை தூண்டுகிறது என்று கிசாலா கூறினார்.
திபெத்தில் வறுமை ஒழிப்பு பணியை தொடர்ந்து மேற்கொள்ளவும் கிராமப்புற உயிர்சக்தியை அதிகரித்து மக்களின் செழிப்பான வாழ்க்கைக்காகவும் அரசு பாடுபடும் என்று அவர் கூறினார்.