மேலை நாடுகள் தங்கள் இருண்ட வரலாற்றை மீளாய்வு செய்ய வேண்டும்
2021-03-30 10:31:57

18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க பருத்தி வளர்ப்புத் துறை விரிவாகி வந்ததுடன், கருப்பினத்தவர்கள் அமெரிக்காவின் தென்பகுதியில் பருத்தி பறிப்பதற்காகத் தாராளமாக விற்கப்பட்டனர். இந்த இருண்ட வரலாறு, அமெரிக்காவில் சில நூறு ஆண்டுகளாக நீடித்த அடிமை முறை வரலாற்றின் ஒரு பகுதி. தற்போது அமெரிக்காவில் விரிவான தொடர்ச்சியான இனப் பாகுபாட்டுப் பிரச்சினையின் முக்கிய மூலக் காரணமாகவும், இது உள்ளது.

இதுவரை, உலகளவில், முஸ்லிம் மக்களின் மீது நுழைவுத் தடை மேற்கொண்ட ஒரே ஒரு நாடு அமெரிக்கா தான். அந்நாட்டில் முஸ்லிம் மக்களைப் பாகுபடுத்தும் செயல்கள் அப்பட்டமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையில் பயங்கரவாத எதிர்ப்பைச் சாக்குப்போக்காகக் கொண்டு, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் முதலிய நாடுகளில் அமெரிக்கா போர் தொடுத்துள்ளது.

சின்ச்சியாங் உய்கூர் இனத்தின் பிரச்சினை என்பது, சீனாவின் உள்நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தி, சீன வளர்ச்சியைத் தடுக்கும நெடுநோக்கு சூழ்ச்சியாகும் என்று அமெரிக்க முன்னாள் தரைப்படை கர்னல் வெல்க்சன் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலை நாடுகள் சீனா பற்றி அவதூறு பரப்பும் வேளையில் அவை தங்களின் இருண்ட வரலாற்றை மீளாய்வு செய்து பார்க்க வேண்டும்.