அமெரிக்காவில் வதந்திகளை உருவாக்கிய நபர்களுக்கு பதில் அளித்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வு அறிக்கை
2021-03-31 21:25:49

கோவிட்-19 தொற்று நோய் பரவ காரணமான வைரஸ் தோற்றம் குறித்த கூட்டு ஆய்வு அறிக்கை ஒன்றை, உலக சுகாதார அமைப்பு 30ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த வைரஸ் ஆய்வகத்தில் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்க மிகவும் சாத்தியமில்லை என்று இந்த ஆய்வு அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளில் இருந்து சிலர் உருவாக்கிய வுஹான் ஆய்வகத்தில் வைரஸ் கசிவு என்ற வதந்தியை இந்த ஆய்வு முடிவு மறுத்துரைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வைரஸ் தோற்றம் குறித்த ஆய்வு, அறிவியல்பூர்வமாக உள்ளது. இதற்கு நேரம் வேண்டும். ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்ற அனுமானம் வேண்டாம். உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் 30ஆம் நாள் கூறுகையில், இந்த ஆய்வு அறிக்கை முக்கிய துவக்கம். அது முடிவு அல்ல. வைரஸ் தோற்றத்தை தேடிப் பார்க்கவில்லை. அறிவியலின் அடிப்படையில் விடாமுயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

வைரஸ் தோற்றத்தை ஆய்வு செய்வதன் நோக்கம் மிகவும் தெளிவானது. அதாவது, மனிதர்கள் எதிர்கொள்ளும் பொதுவான அச்சுறுத்தலை அறிவியல்பூர்வமாக சமாளிக்க வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்ட இலக்கைத் தேடுவது அல்ல. இதற்கு அறிவியலாளர்களின் ஆய்வுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் சர்வதேச சமூகம் செயல்பட வேண்டும்.

வைரஸ் தோற்றம் குறித்த ஆய்வு, உலகளாவிய கடமையாகும். இதனிடையில், வுஹானில் மட்டும் கவனம் செலுத்துவது போதுமானதில்லை. உலகின் வெவ்வேறு பகுதிகளில் கோவிட்-19 தொற்று நோய் மிகவும் முன்னதாக தொடர்ந்து கண்டறியப்பட்டது. எனவே, ஆய்வுப் பணி பல நாடுகளின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

திறப்பு, வெளிப்படை மற்றும் பொறுப்புணர்வு என்ற மனப்பான்மையை பின்பற்றி வரும் சீனாவைப் போல,  தொடர்புடைய நாடுகள் உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்களுக்கு ஆய்வு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக, தொற்றினால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட அமெரிக்கா, வைரஸ் தோற்றம் குறித்த ஆய்வுப் பணிகளுக்கு முனைப்புடன் ஒத்துழைக்க வேண்டும்.

தொற்று நோயை அரசியலாக்குவதன் மூலம் வைரஸைத் தோற்கடிக்க முடியாது. அறிவியலை மதித்து, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புடன் செயல்பட்டால் தான், மக்களை சிரமத்தில் இருந்து மீட்டெடுக்க முடியும்.