சிச்சின்யாங் பருத்தி சம்பவம் மூலம் மேலை நாடுகளின் மேலாதிக்கம்
2021-03-31 10:02:38

ஸ்விட்சர்லாந்தின் சிறந்த பருத்தி வளர்ச்சி சங்கம்(பிசிஐ) அண்மையில் வலுக்கட்டாய உழைப்பு பற்றி பொய்யான அறிக்கை வெளியிட்டதால் சீனாவின் சின்ச்சியாங் பிரதேசத்தில் விளையும் பருத்தி பல சர்வதேசத் தொழில் நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்டது.

இந்தச் சங்கம், தன்னை அரசு சாரா அமைப்பு என பறைசாற்றுகிறது. ஆனால் இதற்கு மறைமுகமாக நிதியுதவி அளிப்பது, வெளிநாடுகளில் ஊடுருவியுள்ள அமெரிக்க சர்வதேச வளர்ச்சி பணியகம் ஆகும். ஷாங்காயிலுள்ள இச்சங்கத்தின் கிளை அலுவலகம் ஒப்படைத்த சின்ச்சியாங் பிரதேசத்தில் வலுக்கட்டாய உழைப்பு இல்லை என்ற கள ஆய்வு அறிக்கையின் முடிவு புறக்கணிக்கப்பட்டதுடன், சீனாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய நெடுநோக்கு கொள்கை ஆய்வு நிறுவனத்தின் பொய்யான அறிக்கையை ஏற்றுக்கொண்டது. திரைக்குப் பின் இருப்பவரை அறிந்த பிறகு இச்செயலின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

சீன வளர்ச்சிக்குப் பாதுகாப்புச் சவாலைத் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் விதமாக, சீனாவுக்கு எதிரான மேலை நாட்டுச் சக்திகள் சின்ச்சியாங் பருத்தியைக் கொண்டு, அவதூறு பரப்புவதில் ஐயமில்லை.