சின்ஜியாங் பருத்திப் பொருட்களைப் புறக்கணிப்பதில் நன்மை யாருக்கு? தீமை யாருக்கு?
2021-04-01 20:46:45

கடந்த சில நாட்களாக பருத்தி பறிக்கும் பெரிய இயந்திரங்கள், சீனாவின் சின்ஜியாங்கில் பரந்த அளவிலான பருத்தி வயல்களில் வேலை செய்த காட்சி பற்றிய காணொளி வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. இந்த உண்மையே, சின்ஜியாங்கில் பருத்தி பறிக்கும் தொழிலில் கட்டாய உழைப்பு என்ற வதந்திகளுக்கு வலுவான பதில் அளிப்பதாக உள்ளது.

சின்ஜியாங் பருத்திப் பொருட்கள் புறக்கணிப்பைப் பின்பற்றி வரும் தொழில் நிறுவனங்கள் உண்மையைப் பார்க்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளைச் சேர்ந்த சீனா எதிர்ப்பு நபர்களின் அரசியல் கருவியாக மாற முடியாது.

தற்போது, உலகின் பருத்தி உற்பத்தி அளவில் கிட்டத்தட்ட 20 சதவீதம்  இடம்பெற்றும் சின்ஜியா பருத்தி, உலகின் விநியோகச் சங்கிலியில் இணைந்துள்ளது.  இவ்வாண்டு ஜனவரி திங்கள் முதல், சின்ஜிங்கில் இருந்து பருத்திகளையும் சின்ஜியாங் பருத்தியால் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளையும் இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்தத பிறகு, பெரிய சர்வதேச நிறுவனங்களுக்கு விநியோகச் சங்கிலியில் பெரும் அழுத்தம் எழுந்துள்ளது. இதனால், நிறுவனங்களின் செலவு அதிகரித்து வருகிறது.

எங்கிருந்து மூலப்பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதில் ஒவ்வொரு நிறுவனத்தற்கும் சுதந்திர உரிமை உண்டு. இருப்பினும், காரணம் தெரியாமல் அரசியல் சூழ்ச்சியில் சிக்கினால், தொழில் நிறுவனத்துக்கு பாதிப்புகள் ஏற்படும். ஏனென்றால், சின்ஜியாங் பருத்திப் பொருட்களைப் புறக்கணிப்பதில், மேலை நாடுகளின் சீனா எதிர்ப்பு அரசியல்வாதிகளுக்கு இழப்பு இல்லை. மாறாக, தொழில் நிறுவனங்களுக்கு தான் தீமைகள் என்பது குறிப்பிடத்தக்கது.