சின்ஜியாங்கில் பயங்கரவாதத்தை ஒழிக்க இன்னும் சில காலம்
2021-04-02 20:00:10

சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சி.ஜி.டி.என். தொலைக்காட்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட “சீனாவின் சின்ஜியாங்கில் பயங்கரவாத எதிர்ப்ப்பு அறைகூவல்கள்” எனும் ஆவணப்படம் ஏப்ரல் 2ஆம் நாள் ஒளிபரப்பத் தொடங்கியது.

கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் என அழைக்கப்படும் பயங்கரவாத அமைப்பு, பல்வகை வலையமைப்பை உருவாக்கி, அதிதீவிர சிந்தனைகளின் மூலம் சிறுப்பான்மை இன மக்கள் சிலருக்கு தீங்கு விளைவித்து, சின்ஜியாங்கில் பிரிவினையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது என்ற உண்மை இந்த ஆவணப்படத்தில் வெளியிடப்பட்டுள்ளது

கடந்த சில ஆண்டுகளில், மேலை நாடுகளில் சீனாவை எதிர்க்கும் நபர்கள் மீண்டும் மீண்டும் சின்ஜியாங் விவகாரத்தைப் பயன்படுத்தி, கட்டாய உழைப்பு போன்ற பொய் தகவல்களையும் வதந்திகளையும் உருவாக்கி பரப்பி வருகின்றனர். சின்ஜியாங்கில் குழப்பங்களை ஏற்படுத்துவதன் மூலம் சீனாவின் வளர்ச்சியைத் தடுப்பது அவர்களின் உண்மையான நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத மற்றும் அதிதீவிரவாத எதிர்ப்பு போன்ற முயற்சிகளுடன்,

சின்ஜியாங்கில் கடந்த 4 ஆண்டுகளில் பயங்கரவாத சம்பவம் ஏதும் ஏற்படவில்லை. பொருளாதார சமூகம் தொடர்ந்து சீராகி வருகிறது.  பிற பிரதேசங்களுடன் இணைந்து சின்ஜியாங்கில் வறுமை ஒழிப்பு இலக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது, மேலை நாடுகளில் சீனா எதிர்ப்புச் சக்திகளின் ஆதரவுடன்,  கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் உள்ளிட்டவை தொடர்ந்து சின்ஜியாங்கில் சீர்குலை நடவடிக்கைகளை மேற்கொள்ள முயல்கின்றன. சின்ஜியாங்கில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் பணி நிறைவடைய இன்னும் சில காலம் ஆகும்.

இந்நிலையை எதிர்கொண்ட போதிலும், சீனா நம்பிக்கை மற்றும் திறமையுடன் அறைகூவல்களைச் சமாளித்து சின்ஜியாங்கின் அமைதிச் சூழலைப் பேணிக்காக்க முடியும்.