சிங்மிங் திருவிழ பற்றி என்ன தெரியும்?
2021-04-02 20:10:54

சிங்மிங் திருவிழா சீனாவின் நான்கு மிக முக்கிய பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றாகும்.  இயற்கையும் கலாச்சாரமும் ஒன்றாக இணைந்த விழாவாகும்.

இவ்விழாவின் போது சீனத் தேசம்,  மூதாதையர்களுக்கு வழிபாடு செய்து முன்னோரை நினைவுக் கூர்வது வழக்கம். வெப்பநிலை மாற்றத்தைக் குறிக்கும் விதமாக,  சீனாவின் 24 பருவ காலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.  2006ஆம் ஆண்டு, சிங்மிங் திருவிழா, சீனத் தேசிய நிலை பண்பாட்டு மரபுச் செல்வங்களின் முதற்கட்ட பட்டியலில் சேக்கப்பட்டுள்ளது.

சிங்மிங் விழாவில் பழக்க வழக்கங்கள்:

சிங்மிங் திருவிழ பற்றி என்ன தெரியும்?_fororder_祭扫背景图

வழிபாடு செய்தல்

மூதாதையர்களுக்கு வழிபாடு செய்து முன்னோரை நினைவுக் கூர்வது வழக்கம்

சிங்மிங் திருவிழ பற்றி என்ன தெரியும்?_fororder_踏青背景图

வனப் பயணம்

சிங்மிங் விழாவின் போது,  வசந்தகாலத்தில் மரங்கள் பச்சையாக மாறி, வெளியே சென்று வனப் பயணம் மேற்கொள்வது வழக்கமாகும். இந்த வழக்கம், 2,500 ஆண்டுகளுக்கும் மேலாகும்.

சிங்மிங் திருவிழ பற்றி என்ன தெரியும்?_fororder_放风筝背景图

பட்டம் பறத்தல்

பேரிடரை நீக்கி, புத்தாண்டில் சுமுகமாக நடப்பதைப் பிரார்த்தனை செய்யும் வகையில், சீற்றம், நோய் உள்ளிட்ட வார்த்தைகளை பட்டங்களில் எழுதி, வானில் பறக்க விடும் வழக்கம்.

வில்லோ மரக் கிளையை அணிதல்

பண்டையக்காலத்தில், சீனர்கள், தலையில் வில்லோ மரங்களின் கிளை மற்றும் இலைகளை வைப்பதன் மூலம் தீமைகளை நீக்கி நன்மை பெறுவதை பிரார்த்தனை செய்வது வழக்கம்.

சிங்மிங் திருவிழ பற்றி என்ன தெரியும்?_fororder_吃青团背景图

சிங்டுவன் எனும் உணவு சாப்பிடுதல்

சிங்டுவன், சீனாவின் பாரம்பரிய சுவையான உணவு வகையாகும்.  சிங்மிங் திருவிழாவில் சிங்டுவன் உணவுகளைச் சாப்பிடும் வழக்கம், 1000 ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடிக்கப்படுகிறது.