வறுமை குறைப்பில் சீனாவின் அனுபவம் மற்றும் பங்களிப்பு என்ற வெள்ளையறிக்கை
2021-04-07 10:44:40

சீனா 6ஆம் நாள் வெளியிட்ட வறுமை குறைப்பில் சீனாவின் அனுபவம் மற்றும் பங்களிப்பு என்ற வெள்ளையறிக்கையில் விரிவான தரவுகள் மற்றும் எடுத்துக்காட்டுகள் மூலம் இத்துறையில் சீனாவின் அனுபவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

சீனாவின் நடைமுறைகளின்படி, மனித முதன்மை, வறுமை குறைப்பை நாட்டின் மேலாண்மையில் முனைப்பான இடத்தில் வைப்பது, வளர்ச்சி சார்ந்த வழிமுறை மூலம் வறுமையை ஒழிப்பது உள்ளிட்ட அனுபவங்கள் இவ்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன. சீனாவினை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, எப்போதும் மக்களின் நலனை மையமாகக் கொண்டு, வறுமைக் குறைப்பில் ஈடுபட்டு வருவது, இவற்றில் மிக முக்கியமான அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வறுமை குறைப்புப் போக்கினை உற்றுநோக்கும் போது மகளிர், குழந்தை, முதியோர், ஊனமுற்றோர், சிறுப்பான்மை தேசிய இனத்தவர் முதலியோரைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு முக்கியமாக உதவியளித்து, மக்களின் வாழும் உரிமை, வளர்ச்சியுறும் உரிமை மற்றும் சமூகத்தின் நியாயத்தைப் பேணிக்காப்பது, சீன அனுபவங்களின் தெளிவான சிறப்பாகும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

வறுமை குறைப்பில் சீனாவின் நடைமுறைகளும் அனுபவங்களும், பல்வேறு வளரும் நாடுகளுக்கு வறுமை ஒழிப்பில் நம்பிக்கையை ஊட்டியுள்ளன. அதே வேளை உலகின் வறுமை குறைப்புக்கான அறிவையும், உலகின் மனித உரிமை பாதுகாப்புக்கு உந்து சக்தியையும் சீனா ஊட்டியுள்ளது.