சீனாவின் வறுமை ஒழிப்பு அனுபவப் பகிர்வு
2021-04-08 11:31:02

“வறுமை ஒழிப்பில் சீனாவின் அனுபவம் மற்றும் பங்களிப்பு” என்ற வெள்ளை அறிக்கையை சீன அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில், வறுமை ஒழிப்பில் சீனா பெற்றுள்ள சாதனை எப்படிப்பட்டது என்பது பற்றியும், நடைமுறைக்கேற்ற இலக்குடைய வறுமை ஒழிப்புப் பணியை மேற்கொள்வது ஒரு முக்கிய அனுபவம் என்பது குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.

சீனா, வறுமையை ஒழிக்கும் போக்கில்  தொழில்களை வளர்ப்பது, தொழில் திறனை மேம்படுத்துவது, கல்வி நிலைமை உயர்த்துவது முதலிய வழிமுறைகளை பயனுள்ள நடவடிக்கைகளாக மாற்றியுள்ளது.

துல்லியமான முறையில் வறுமை ஒழிப்புப் பணியை மேற்கொள்வதென்பது, சீனாவுக்கு மட்டுமின்றி, மனிதகுல வறுமை ஒழிப்புக்கும் புதிய அனுபவத்தை அளித்துள்ளது. இவ்வெள்ளை அறிக்கையில், ஆசியாவில் சீனாவும் ஆசியானும் கிராம வறுமை ஒழிப்புத் திட்டத்தைக் கூட்டாக நடைமுறைப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்றே, ஆப்பிரிக்காவில், அடிப்படை வசதிக் கட்டுமானம், வேளாண்மை, மருத்துவம் முதலிய துறைகளில் சீனா தொழில் நுட்ப ஒத்துழைப்பு மற்றும் உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், லத்தீன் அமெரிக்காவில் சீனாவின் உதவியுடன் நிறுவப்பட்ட வேளாண் தொழில்நுட்ப மாதிரி தளங்களில், உள்ளூர் மக்கள் வறுமையிலிருந்து விடுபடுவதற்கு உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.