சீனாவின் பொறுப்புணர்வைக் காட்டுகின்ற வூஹானின் மீட்சி
2021-04-08 20:00:13

வசந்தகாலத்தின் வூஹான் நகரில், செர்ரி மலர்கள் அதிகமான பயணிகளை ஈர்த்துள்ளன. பல்வேறு வணிகச் சாலைகளில் மக்கள் கூட்டம் உள்ளது. கடந்த ஓராண்டில், வூஹான் நகரின் மீட்சி நம்ப முடியாத அளவுக்கு உள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2020ஆம் ஆண்டு, வூஹான் நகரம், கரோனா வைரஸ் பரவலின் பாதிப்பைச் சமாளித்ததுடன், அதன் பொருளாதாரத்தின் மொத்த மதிப்பு சீனாவின் முதல் 10 நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

சீனா மேற்கொண்ட ஊரடங்கு நடவடிக்கை, வைரஸ் பரவல் தடுப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வூஹானின் விரைவான மீட்சி மீண்டும் நிரூபித்துள்ளது.

வேறு நாடுகள் சீனாவை அறிந்து கொள்ளும் ஜன்னலாக வூஹானின் வளர்ச்சி விளங்கியுள்ளது. இதன் மூலம், கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான சீனாவின் பயன்தரும் நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், உலகளவில் வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் பொருளாதார மீட்சிக்குச் சீனா ஆற்றிய பெரும் பங்கினையும் முழு உலகம் அறிந்து கொண்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சீனா 22 ஆயிரம் கோடிக்கும் மேலான முகக் கவசங்களை வழங்கி, 150க்கும் மேலான நாடுகள் மற்றும் 10 சர்வதேச அமைப்புகளுக்கு உதவியளித்ததோடு, தற்போது 80க்கும் மேலான நாடுகள் மற்றும் 3 சர்வதேச அமைப்புகளுக்குத் தடுப்பூசிக்கான உதவியையும் சீனா அளித்துள்ளது. இது பல நாடுகளின் நன்றியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

புதிய வளர்ச்சி அமைப்புமுறையை விரைவாக உருவாக்கி வருகின்ற சீனா, உலகத்துக்கு கூட்டு வெற்றிக்கான மேலதிக வாய்ப்புகளை வழங்குவது உறுதி.