சொந்த மேலாதிக்கத்தை அமெரிக்கா நிலைநிறுத்துவதற்கான களம் தென் சீனக் கடல் அல்ல
2021-04-09 20:54:36

ஏப்ரல் 7ஆம் நாள் அமெரிக்க கடற்படையின் ரூஸ்வெஸ்ட் விமானந்தாங்கி கப்பல் தென் சீனக் கடலில் கூட்டு இராணுவப் பயற்சியை முடித்துக் கொண்டது. இவ்வாண்டில் இக்கப்பல் மூன்றாவது முறை தென் சீனக் கடற்பரப்பில் சட்ட விரோதமாக நுழைந்தது என்பது, இக்கடலின் அமைதிக்கான மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமெரிக்கா மாறியுள்ளதை மீண்டும் நிரூபித்துள்ளது. ஆனால் அது எவ்வாறு வலிமையைக் காட்டிலும், தென் சீனக் கடலை குழப்பமாக்க முயலும் அதன் நோக்கம் வீணாகவே போகும்.

தற்போது சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் கூட்டு முயற்சியுடன், தென் சீனக் கடலின் ஒட்டுமொத்த நிலைமை சீராக உள்ளது. சீனாவுடன் அமைதியான முறையில் உரிமைப் பிரதேச சர்ச்சையைத் தீர்க்க விரும்புவதாக பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் அண்மையில் தெளிவாகத் தெரிவித்துள்ளார். மேலும், 4 ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சீனப் பயணம் மேற்கொண்டனர். அண்டை நாடுகள் நடைமுறைக்கு ஏற்ற நிலையில் மற்ற நாடுகளுடன் நட்புறவை முன்னேற்ற விரும்புகின்றன என்பதையும், அவை அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் கருவியாக மாற விரும்பவில்லை என்பதையும் இது வெளிக்காட்டியுள்ளது.