உலக அமைதியைத் பாதிக்கும் அமெரிக்க பாணி ஜனநாயகம்
2021-04-13 15:03:54

அண்மையில் கிழக்கு உக்ரைன் நிலைமை தீவிரமாகி வருகிறது. இதில் அமெரிக்காவின் தலையீடு அடிக்கடி காணப்படுகிறது. இதன் காரணமாக பெருமளவு இராணுவ மோதலில் சிக்கிக் கொள்ளும் பேரிடரை உக்ரைன் எதிர்நோக்குகிறது. இது, ஐனநாயகத்தின் பேரில் அமெரிக்கா குழப்பமாக்கி உலக அமைதியை பாதிக்கும் செயல்களின் விளைவுகளில் ஒரு பகுதி மட்டுமே.

மனித உரிமைகள் ஆய்வுக்கான சீனச் சமூகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, 2ஆவது உலகப் போருக்குப் பிறகு ஏறக்குறைய அனைத்து அமெரிக்க அரசுத் தலைவர்களும் வெளிநாட்டின் மீது போர் தொடுத்தனர் அல்லது வெளிநாட்டு மீதான போரில் தலையீடு செய்தனர். இந்தப் போர்களில் பெருவாரியான படையினர்கள் உயிரிழந்ததோடு, அப்பாவி மக்களிடையில் கடும் உயிரிழப்பு மற்றும் சொத்துகளின் இழப்பும் ஏற்பட்டு, அதிர்ச்சியான மனித நேய பேரழிவு உண்டாகியது.

தனது ஆக்கிரமிப்புச் செயல்களுக்குச் சட்டப்பூர்வ போர்வையைப் போடும் வகையில், அரசுரிமையை விட மனித உரிமை உயர்வு, மனிதநேய தலையீடு உள்ளிட்ட கருத்துக்களை அமெரிக்கா புனைந்து விட்டது. ஆனால் எவ்வளவு அழகான வெளிதோற்றத்துடன் இருந்தாலும், அதன் இழிவான உள்நோக்கம் மற்றும் மோசமான பின்விளைவை மறைந்திருக்க முடியாது.

கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவின் பல தலைமுறையினர்கள் எண்ணெய்க்காக போரிட்டனர் என்பதை அமெரிக்கத் துணை அரசுத் தலைவர் ஹாரிஸ் அண்மையில் கசியவிட்டார். இது இணையப் பயனாளர்களின் விமர்சனத்துக்குள் ஆக்கப்பட்டது. இருப்பினும் ஆச்சரியமான மனிதநேய பேரழிவை எதிர்கொண்ட போது அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர் இன்றுவரை வர்த்தம் அடையவில்லை. ஜனநாயகத்துக்குப் பதிலாக பதற்றம் மற்றும் போர்களை அமெரிக்கா ஏற்றுமதி செய்து வருவதை அதன் செயல்களின் மூலம் உலகம் தெளிவாக தெரிந்து கொண்டுள்ளது. மேலாதிக்க இயல்பு கொண்ட அமெரிக்கா மனித உரிமையைப் பேணிக்காப்பதை எதிர்பார்க்க முடியாது.