முயற்சியுடன் நல்ல தொடக்கத்தை வரவேற்ற சீன வெளிநாட்டு வர்த்தகம்
2021-04-14 12:37:06

சீன அதிகார வட்டாரம் 13ஆம் நாள் வெளியிட்ட முதல் காலாண்டுக்கான வெளிநாட்டு வர்த்தகத் தரவுகளின்படி, சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட முறையே 38.7 விழுக்காடு, 19.3 விழுக்காடு ஆகிய விகிதத்தில் அதிகரித்தன. இது, கடந்த ஆண்டின் 4ஆவது காலாண்டிலிருந்து தொடர்ந்த வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தி, இவ்வாண்டுக்கான நல்ல தொடக்கத்தை நனவாக்கியுள்ளது.

கரோனா தடுப்பூசி போடப்படும் அளவு விரிவாகி வருவதனால் உலகப் பொருளாதாரத்திலும் சீரான மீட்சி போக்கு காணப்பட்டுள்ளது. வெளிப்புறத் தேவையின் அதிகரிப்பு காரணமாக, சீனாவின் ஏற்றுமதி விரைவாக அதிகரித்து வருகிறது. அதனுடன், சீனத் தொழில்துறையின் உற்பத்தி, முதலீடு, நுகர்வு ஆகியவைகளும் தொடர்ந்து மீட்சி அடைந்து வருவதால் இறக்குமதியும் மீட்சி அடைந்துள்ளது.

கரோனா தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியையும், பொருளாதார வளர்ச்சிக்கானப் பணியையும் பயனுள்ள முறையில் ஒருங்கிணைத்துள்ள சீனா, வெளிநாட்டு வர்த்தகத்தின் தொடர்ச்சியான சீரான செயல்பாட்டுக்கு வலுவான ஆதரவை அளித்து வருவது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.

சீன வெளிநாட்டு வர்த்தகம் நல்ல தொடக்கத்தைப் பெற்றிருப்பது எளிமையானதல்ல. இதன் பின்னணியில், சீனாவில் வர்த்தகத்தின் நிலவமைப்பு சார் பரவல் மேலும் சரிசமமாகி வருவது, உயர்தரத் திறப்பைச் சீனா முன்னேற்றி வருவதன் நன்மைகளை வெளியுலகம் கண்டறிந்துள்ளது, உயர் நிலையிலான திறப்பு மேலும் உயர்தரமான வெளிநாட்டு வர்த்தக அதிகரிப்பைக் கொண்டு வந்துள்ளது என மூன்று முக்கியக் காரணிகள் உள்ளன.

திறப்பு என்பது சீனாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கும் துணைபுரியும். சீன வெளிநாட்டு வர்த்தகம் பெற்றுள்ள சிறந்த சாதனையில் ஒத்துழைப்புடன் கூடிய கூட்டு வெற்றி என்ற கருத்தின் ஆற்றலைத் தெளிவாகக் காண முடியும்.