தொடர்கின்ற மேலை நாடுகளின் காலனித்துவ வாதத்தின் பாதிப்பு
2021-04-15 12:10:43

ஆப்பிரிக் நாட்டவர்கள் செலுத்திக் கொண்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை உலகளவில் 2 விழுக்காடு மட்டும் வகிக்கிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்க பகுதி தலைவர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தடுப்பூசிகளின் சமனற்ற பங்கீடு பற்றி கவலை தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் காலனி ஆட்சி வரலாற்றை அறிந்து கொண்டவர்களைப் பொறுத்தவரை இது வியப்புக்குரியது அல்ல. தடுப்பூசி பங்கீட்டில் காணப்பட்ட பெரிய இடைவெளி என்பது, சில நூற்றாண்டுகளில் மேலை நாடுகள் காலனி மற்றும் கொள்ளையால் வேறுபட்ட நாடுகளுக்கிடையில் ஏற்படுத்திய சமனற்ற நிலைக்கான ஒரு எடுத்துக்காட்டாகும்.

உலக மக்கள் தொகையில் 16 விழுக்காடு வகிக்கும் செல்வ வளமிக்க நாடுகள் 60 விழுக்காடு கரோனா தடுப்பூசிகளைக் கொண்டுள்ள நிலையில், வறுமையிலுள்ள வளரும் நாடுகளுக்கு உதவி அளிக்கவில்லை. இதற்கான காரணம், வளர்ந்த நாடுகள் காலனித்துவம் மற்றும் கொள்ளை வழியாக செல்வ வளம் திரட்டி வளர்ச்சி அடைந்தன. இது மட்டுமல்ல, அவற்றின் காலனித்துவ வாதத்தால், பல நாடுகள் இன்னும் வறுமையில் சிக்கி அல்லல்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் இனவெறி பாகுபாடு மற்றும் வெள்ளையின மேலாதிக்கவாதம், காலனித்துவ வாதத்தின் விளைவாகும்.

ஆனால் சர்வதேச உறவு ஜனநாயகமாக மாறி வரும் இன்று, காலனித்துவ வாதத்தைப் பயன்படுத்தி மற்ற நாடுகளை தொடர்ந்து ஆதிக்கம் செய்ய விரும்பும் மேலை நாடுகளின் முயற்சி, பகல் கனவாகவே இருக்கும்.