சின்ஜியாங் தொடர்பான பொய்களை எப்படி நம்பிக்கையுடன் கட்டவிழ்க்கின்றனர்?
2021-04-15 14:17:32

அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் சில அரசியல்வாதிகள் சீனாவின் சிங்ஜியாங்கின் மீதான பொய்களை எவ்வாறு நம்பிக்கையுடன் கட்டவிழ்க்கின்றனர்? அண்மையில் ஆஸ்திரேலியக் கட்சி எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு அறிக்கை இதற்கு விடை அளிக்கிறது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகள் புவியமைவு அரசியல் நோக்கங்களுக்காக பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து, சீனாவின் நிதானம் மற்றும் வளர்ச்சியை சீர்குலைத்து வருவதை அந்த அறிக்கை விரிவாக வெளிப்படுத்துகிறது.

தவிர, கடந்த சில ஆண்டுகளில், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் சீனா சிறந்த சாதனைகளைப் பெற்றுள்ளது என்பதை உணர்ந்து கொண்ட அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாட்டு அரசியல்வாதிகள் சில நிறுவனங்களுடன் இணைந்து, மேலை நாட்டு செய்தி ஊடகங்களைப் பயன்படுத்தி, சின்ஜியாங் பற்றிய மாபெரும் வதந்திகளை உருவாக்கிப் பரப்பி வருகின்றனர். இந்த இழிவான செயலை இவ்வறிக்கை ஆழமாக அம்பலப்படுத்துகிறது.

உண்மை என்ன?பார்த்தவற்றை உண்மையென நம்புகிறோம்.

அண்மையில், இஸ்ரேலியக் குறுங்காணொலித் தொகுப்பாளர் ஒருவர் சிங்ஜியாங் அக்ஸு பகுதிக்குச் சென்று, இயந்திரமயமாக்கப் பருத்தி பயிரிடுதலை அனுபவித்தார். சின்ஜியாங்கில் எல்லாம் இயல்பாக உள்ளதாகவும் மக்கள் மகிழ்ச்சிக்காக போராடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.