அமெரிக்காவின் தலையீட்டு கொள்கையின் நோக்கம்?
2021-04-16 15:58:55

அமெரிக்காவும் ஈரானும் ஏப்ரல் 15ஆம் நாள் ஆஸ்திரியாவின் வியன்னாவில் மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்தின. 14ஆம் நாள், ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா சாயீத் அலி காமெனேய் கூறுகையில், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய பன்முக உடன்படிக்கைக்குத் திரும்ப, அமெரிக்கா விரும்பினால், ஈரான் மீதான தண்டனையை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அமெரிக்கா மேற்கொண்டு வரும் தலையீட்டு கொள்கைகளில், ஈரான் உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. 2ஆவது உலக போருக்கு பின், அமெரிக்கா தலையீட்டுக் கொள்ளையைப் பின்பற்றி வருகின்றது. இராணுவ நடவடிக்கை மேற்கொள்வது, தண்டனை விதிப்பது, கலகத்தை ஏற்படுத்துவது போன்ற வழிமுறைகளில், உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில், அமெரிக்கா தனது தலையீட்டுக் கொள்கையைத் தீவிரமாக்கி வருகின்றது என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோசப் நை கூறினார்.

புதிய ரக கரோனா வைரஸ் உலகளவில் பரவிய போதிலும், அமெரிக்கா பல நாடுகளுக்கு தன்னிச்சையாக தண்டனை விதித்து வருகின்றது. இது மனித நேய நெருக்கடியை தீவிரமாக்கியுள்ளது. இது குறித்து கனடா பொருளியலாளர் கென் மோக் சமீபத்தில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், உலக நாணயங்களில் ஒன்றான அமெரிக்க டாலரின் தகுநிலையை கொண்டு, மற்ற நாடுகள் அமெரிக்க டாலர் பெறும் வழியைத் தடுத்து தடை ஏற்படுத்துவதன் மூலம், அந்நாடுகளின் உள்விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு வருகின்றது. இச்சூழலில், தடை விதிக்கப்பட்ட நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, அந்நாட்டு மக்களின் வாழ்க்கை கடும் இன்னல்களை எதிர்நோத்தியுள்ளது. ஈரான், வெனிசுவேலா ஆகிய நாடுகளின் தற்போதைய நிலைமை இதற்கு தக்க சான்றுகள் ஆகும் என்று தெரிவித்தார்.